பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் * ഞഖങ്ങധ (12) 129 வாச நறுநெய் ஆடி வான்துகள் - மாசறக் கண்ணடி வயக்கி, வண்ணமும் 20 தேசும் ஒளியும் திகழ நோக்கி, வாச மணத்துவர் வாய்க்கொள் வோரும், இடுபுணர் வளையொடு தொடுதோள் வளையர் கட்டுவடக் கழலினர், மட்டு மாலையர், - ஒசனை கமழும் வாசமேனியர், 25 மடமா மிசையோர், ! - பிடிமேல் அன்னப் பெரும்படை அனையோர், கடுமா கடவுவோரும் களிறுமேல் கொள்வோரும், வடிமணி நெடுந்தேர் மாமுள் பாய்க்குநரும், வையையில் புதுவெள்ளம் வந்தது. அதனையறிந்த மதுரை மக்கள் பலரும் வையையை நோக்கிச் செல்லலாயினர். அதனை உரைப்பது இப்பகுதி. . . . . சிறந்த மலர்களைத் தன்மேற் பரப்பிக் கொண்டதாய், அழகோடும் தண்மையோடும் வருகின்ற புனலானது, வையை யாற்றிலே வந்து, மதுரை நகரத்துக் கோட்டை மதிலை மோது கின்றது என மக்கள் கேட்டனர். கேட்டதும், அவரவர்களும் நீரணி விழாவிற்குப் புறப்படலாயினர். - - மின்னலைப்போல விட்டுவிட்டு ஒளிபரப்பும் அணிகளைச் சில மாதர் அணிந்து கொண்டனர். பொற்றகட்டாலான அழகிய பூவணியைச் சிலர் அணிந்தனர். மார்பிடத்துப் பொருந்திய சந்தனச்சாந்தினை மாற்றி, அகிற்புகையின் மணம்கெழுமிய சந்தனச்சாந்தைப் பூசிக்கொண்டனர். கருமை கொண்ட கூந்தலைக் குழலாக முடித்தனர் சிலர். வெட்டி வேரினை இடையிடையே வைத்துக் கட்டிய பலவகை மலர்கள் பொருந்திய மாலையினைச் சூடிக்கொண்டனர் சிலர். தமக்குப் பொருந்திய சேலைகளை எடுத்து அழகுற உடுத்துக் கொண்ட்னர் சிலர். கொக்கிகள் பொருந்திய ஆரங்களை அணிந்து கொண்டனர் சிலர்.வாசனை பொருந்திய மணநெய்யைத் தடவிக் கொண்டனர். கண்ணாடியிற் படிந்துள்ள மிக்க தூசுகளைத் துடைத்துப் போக்கிவிட்டு, அதில் தம் வண்ணமும், தேசும் ஒளியும் தோன்ற, அதனை நோக்கியபடியே வாசனைப் பொருள்களோடுங் கூடிய பாக்கினை வாயிலிட்டுக் கொண்டனர். பொருந்திய வளைகளைக் கைகளில் இட்டுக்கொண்டதோடு, தோள்வளை களையும் இட்டுக்கொண்டனர். கட்டுவடத்தையும், கழலையும் காலிடத்து அணிந்து கொண்டனர். இவ்வாறு ஒப்பனை செய்து கொண்ட மகளிர், ஒரு யோசனை தூரத்துக்கும் மணங் கமழ்தலையுடைய வாசமேனியராகத் திகழ்ந்தனர். - - -