பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - - பரிபாடல் மூலமும் உரையும் முதற் பாடல் திருமால் வாழ்த்து () அனைவரும் தாந்தாம் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் இனிதே நிறைவெய்துதல் வேண்டும் என்றே விரும்புவர். அதற்குத் தத்தம் ஆற்றலின் துணைமட்டும் போதாது, தோன்றாத் துணையாக நின்று அனைத்தையும் இயக்கி வரும் தெய்வத்தின் துணையும் வேண்டும் என்றும் கருதுவர். இதனால், தாம் செய்யப்புகும் நூற்களினுள்ளும் முதற்கண் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைச் செய்து, தாம் வழிபடும் கடவுளை யேனும், தாம் செய்யும் நூற்கு இயைபுடைய கடவுளையேனும் போற்றி, அதன்பின்னரே நூலைச் செய்வர். இம்மரபு, வழி வழியாகத் தமிழ்ச் சான்றோரிடைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் மரபு ஆகும். - . பரிபாடல் என்னும் இத்தொகைநூல் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களையே மிகுதியாகக் கொண்டது. எனினும், இதன் முதல் நான்கு செய்யுட்களும் கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பிடப்பட்டு வழங்கி வருகின்றன, அவற்றுள் முதலாவ தாகிய இச் செய்யுள், காத்தற் கடவுளான திருமாலைப் போற்றித் துதிப்பதாக அமைந்துள்ளது. - - இப் பரிபாடலைப் பாடியவரின் பெயர் இன்னதென்பது தெளிவாகவில்லை. எனினும், இதன் அமைப்பு மிக்க பொருட் செறிவினைக் கொண்டதாகும். காத்தற் கடவுளான திருமால் தமக்குத் துணைநின்று, தம்மையும் இவ்வுலக உயிர்களையும் காத்துப் பேணுவான் என்று ஆசிரியர் உறுதியாக நம்புகின்றார். அந் நம்பிக்கையோடு, அவனருளை வேண்டியவராக, அவன் புகழையும் போற்றிப் பாடுகின்றார். - நாஞ்சிலோனே! ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை தீயுமிழ் திறனொடு முடிமிசை அணவர மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச் சேயுயர் பணைமிசை எழில்வேழம் ஏந்திய y வாய்விளங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை 5 - பாற்கடலின் நடுவே, பரந்தாமனாகிய நீ அரவுப்பாயலிலே பள்ளி மேற்கொண்டவனாக, அறிதுயில் பூண்டிருக்கின் றனை! காண்பாரை அச்சமுறச் செய்யும் அரிய அமைப்பைக் கொண்டவனான, ஆயிரம் தலைகளை உடையவன் ஆதிசேடன்.