பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 - பரிபாடல் மூலமும் உரையும் இதழ் விரிந்த மலர்களினின்றும் ஒழுகும் மதுவினாலே மரங்கள் நனைந்தவையாகத் தோன்றும், நின்க்குரிய திருப் பரங்குன்றத்திலே, தீப்பந்தம், இசைக் கருவிகளின் ஒலி, மணப் பொருள்களின் மணம், நறும்புகை, உயர்ந்த சேவற்கொடி ஆகியவை எல்லாம் ஒன்றாக எழுந்தபடி, எவ்விடத்தும் விளங்கும், இவ்வாறாக, மாலைக் காலந்தோறும் நின் திருவடிக் கண் தம்மை ஈடுபடுத்தி, நின்னை வழிபட்டு வாழ்பவர் நின் அடியவர். அவர்களுள்ளே நின்னை வழிபட்டுப் பெறுகின்ற அவ்வின்பத்தை யல்லாமல், தேவருலகத்துப் போகவாழ்வையும் விரும்புகின்றவர்தாம் யாவரோ? அவர் எவருமில்லைகாண்! - சொற்பொருள் : தேம் - தேன், தேம்படுமலர் - தேன் சிந்தும் புதுமலர். குழை - பூங்குழை, வடித்தல் வார்த்தல், சாந்தம் - சந்தனம். விடை - ஆட்டுக் குட்டி அரை - அடி மரம். வேலன் - வெறியாடுவோன்; பூசாரி. கடிமரம் - கடம்பு; தெய்வம் வீற்றிருக்கும் மரம். பரவினர் தொழுது போற்றுவார். பண்ணிய இசை-பண்ணப்பட்ட இசை கருவிகளை இயக்கி எழுப்பும் இசை கோல் எரி - தீப்பந்தம்; கோலின் முனையில் அமைந்த எரி. கொளை நறை இசையும் மணப் பொருட்களும்; இசை எழுப்பும் வண்டினங்களும் ஆம். மேலோர் உறையுள் தேவருலகம்; போகவுலகம். - - விளக்கம் : 'பெருமானே! நின்னைப் பாடிப் பரவிப் போற்றுவாரான அடியவர், மேலோர் உறையுளைக் காட்டினும், அதனையே பெரிதாக மதித்துப் போற்றுவர் என்பதாம். பிறகாலத்து அப்பரடிகள், மனித்தப் பிறவியும் வேண்டுவதே" என்று கூறியதையும் நினைக்க - எங்கணும் போற்றுவர்! ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ: ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ; 10 ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபு எழ: - ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசை யூத, ஒருதிறம், மண்ணார் முழவின் இசையெழ; ஒருதிறம், அண்ணல் நெடுவரை அருவிநீர் ததும்ப; ஒருதிறம், பாடல்நல் விறலியர் ஒல்குபு நுடங்க; 15 ஒருதிறம், வாடை உளவயின் பூங்கொடி நுடங்க, ஒருதிறம், பாடினி முரலும் பாலையங் குரலின் நீடு கிளர் கிழமை நிறைகுறை தோன்ற; ஒருதிறம், ஆடுசீர் மஞ்ஞை அளிக்குரல் தோன்ற, மாறுமாறுற்றனபோல் மாறெதர் கோடல் 20 மாறட்டான் குன்றம் உடைத்து, -