பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பரிபாடல் மூலமும் உரையும். சான்றோரின் பாடல்களாலே சிறப்புற்றுப் பல்வேறான சிறப்புக்களுடன் முதிர்ந்து விளங்குவது கூடல் மாநகரம். அதற்கும் பரங்குன்றிற்கும் இடைப்பட்ட வழியினது தொலைவும் சிறிதே. எனினும், அவ்வழிச் செல்பவர், அவரவர் விரும்பும் மணங்கமழும் மண்ச்சாந்துகளை மிகுதியாகப் பூசியவராகச் செல்வார்கள். இம் மணத்தின் கவர்ச்சியினாலே மிக நனித்தான அவ்விடை வழியும் கடத்தற்கு மிகவும் தொலைவிலுள்ளது போல, நெடுநேரத்தைச் செலவிடற்கு உரியதாக விளங்கும். மிக்க மகிழ்ச்சியோடு செல்லும் பெண்களின் கூந்தலில் விளங்கும் தேன்சிந்தும் மலர்களும், ஆடவரது குடுமியிலே விளங்கும் மணமாலைகளின் மலர்களும், தம் கட்டினின்றும் சோர்ந்து விழுந்தது பரவ, அவ் விதழ்களின் பெருக்கத்தால், செல்லும் வழியே இல்லையென்று சொல்லும்படியாக, எங்கணும் பூக்காடாகவே விளங்கும். சொற்பொருள் : புகழ் சிறப்பு முற்றிய நிறைவுற்ற சாந்துமணச்சாந்து.மகிழ்-மகிழ்ச்சி, காதலொடு கூடிக் கலந்து செல்லும் களிப்பு இயங்கும் ஆறு செல்லும் வழி. இன்று இல்லை: பூக்கள் மூடிக்கிடத்தலால் வழி மறைக்கப்பட்டுக் கிடந்தது என்பாதாம். கமழும் புகை! வசைநீங்கிய வாய்மையால் வேள்வியால் திசைநாறிய குன்றமர்ந்து ஆண்டாண்டு - - ஆவி யுண்ணும் அகில்கெழு கமழ்புகை 30 வாய்வாய் மீபோய் உம்பர் இமைபிறப்பத் தேயா மண்டிலம் காணுமா றின்று; - வசைச் சொற்களினின்றும் நீங்கிய வாய்மைகளாலும், வேள்விகளாலும், எட்டுத் திசைகளிலும் தன் புகழ் பரவ விளங்குவது நின் பரங்குன்றம். பன்னெடுங்காலமாக அதனி டையே கோயில் கொண்டிருந்து, அந்தணர் அளிக்கும் அவிப் பலியையும், பக்தர்கள் புகைக்கும் அகிலோடு கூடிய பிற மணப் பொருள்களையும் புகைப்பதனால் எழும் நறும்புகை யினையும் ஏற்றிருந்து அருள்பவன் பெருமானாகிய நீ இப்படிப் புகைக்கும். நறும்புகைகள் இடங்கள்தோறுமிருந்து எழுந்து, மேலே சென்று வானத்தையும் முட்டும். அதனால் கண்ணிமையாராகிய வானவரும் இமைப்பவராகி, அவ்விடம் விட்டு அகன்று போவர். ஒளிகுன்றாத கதிர்மண்டிலமும் புகை மூட்டத்தால் காண்பதற்கு இயலாதாய் மறைந்துபோம். - சொற்பொருள்: வசை - பழிச்சொற்கள். வாய்மை மெய்ப் பொருளாம் தன்மை; இவை பெருமானைக் குறித்து அடியவர்