பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பரிபாடல் மூலமும் உரையும் சொற்பொருள் ; வச்சியம் - வசியம்; பிறரைத் தன்பால் கவர்தலாகிய ஆற்றல், அழகு முதலியன. மறல் மாறுபடல். நச்சினார் - விரும்பி வந்த ஆடவர். சேக்கை - கூட்டம். காக்கை - காத்துப் பேணுதல் சான்றாண்மை - உயர்ந்த ஒழுக்கம் கேள்வர் கணவர். ம்ைந்து மயக்கம்; இது ஆராக்காமத்தல் எழுவது. முடிபொருள் முடிந்த பொருள். கடவரை நிற்கும் எல்லை. துணி முற்றிய சினம். புலவி- சிறு சினம். - , - விளக்கம் : கணவனது பொருந்தா ஒழுக்கத்தின் காரண மாகத் தலைவிக்கும் பரத்தைக்கும் இடையே நிகழவிருந்த பூசலை, இவ்வாறு இருவருக்கும் அறவுரைகூறி, முதுபெண்டிர் தடுத்தனர் என்க. இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்’ எனக் கற்புமகளிரது சீரிய பண்பினையும் உரைத்தனர். - * சுருங்கை நீர்! கொடியியலார் கைபோற் குவிந்த முகை அரதவுடன் றவைபோல் விரிந்த குலை குடைவிரிந்தவைபோலக்கோலு மலர் 100 சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் - சினைவிரிந்து உதிர்ந்தவிப் புதல்விரி போதொடும் அருவி சொரிந்த திரையின் துரந்து - நெடுமால் சுருங்கை நெடுவழிப் போந்து, - கடுமா களிறணத்துக் கைவிடுநீர் போலும் . 105 . . . நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல் - - ... • கடிமதில் பெய்யும் பொழுது, - a - பூங்கொடியைப் போல அசைந்தசைந்து நடை பயில் வாரான மகளிரின் கைவிரல்களைப் போலக் குவிந்துள்ள காந்தளின் மொட்டுக்கள்; நாகப் பாம்பு சினந்து படத்தை விரித்துத் தூக்கினாற்போலக் குலை குலையாக மலர்ந்துள்ள காந்தட்பூக்கள் குடைகளை விரித்து வைத்தாற்போல விளங்கும், அக் காந்தளாற் சூழப்பெற்ற பலவகை மலர்கள்; சுனைகளி னின்றும் கழிந்து கீழே வருனவாகிய நீர்ப்பூக்கள் மரக்கிளை களில் மலர்ந்து உதிர்ந்த பூக்கள்; புதர்களில் மலர்ந்து உதிர்ந்த பூக்கள் என்னும் இவை எல்லாம், அருவி சொரிந்து நீர்த் திவலைகளைப் போலத் தத்தம் இடத்தைவிட்டு நீங்கி, நெடிதும் பெரிதுமான சுருங்கையின் நடுவழியாக நீருடன் புகுந்து, காவலையுடைய கடந்து ஊருக்குள்ளே பெய்யும் பொழுது, கொடிய சினத்தையுடைய விலங்காகிய களிறானது தன் துதிக்கையின்கண் நீரை முகந்து சொரிவது போலத் தோன்றும் பேரளவான வையையாற்று நீரால் மிக்க புனலையுடைய தான நீள்மாடக்கூடலின் தன்மை இதுவாகும். -