பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 r பரிபாடல் மூலமும் உரையும் வேலைப்பாடமைந்த மேகலையினையும், அழகுற வரிசையாக ஒளியோடு விளங்கும் இனிய புன்சிரிப்பையுடைய பல்வரிசை யினையும் உடையவரான இளமகளிரும் வையைக் கரையில் திரண்டனர். - r சிறந்த அழகுடைய வையைக்கு இவர்கள் நிற்பதனால் அழகு உண்டாகின்றதோ? அல்லது வையையின் நீரணிவிழா வாகிய புதுவெள்ளம் இவர்களுக்கு அழகு தந்த்தோ? என ஆராய்வார் ஒரு முடிவுக்கு வருதல் அரிது என்னுமாறு, அம் 'மகளிர் விளங்கினர். - - இவ்வாறாக வையைக்கரையின்கண் திரண்டிருந்த இளை ஞரும், இளமகளிரும், வையையும் சேர்ந்திருக்கின்ற, கண்ணுக்கு அழகான காட்சியினைக் காண்பார், தாம் செய்த தவப்பயன் பெரிது’ எனத் தமக்குள் வியப்புடன் பேசுவாராயினர். சொற்பொருள் : மொய்ம்பன் - வலிமையாளன்.விரை - மணம் முன்பு - ஆற்றல். சான்ம் - சாலும் கார் - கார்மேகம், கயல் கெண்டை கவிர் - செம்முருக்கின் மலர். வார் - கச்சு கொம்மை இளமை கொண்ட மார்பகம். ஏர் - அழகு வகை செய்வினை வகை நகை - இளநகை நீத்தம் - வெள்ளம். தீரம் - கரைப்பகுதி. திருமருத முன்துறை மண்கனை முழவின் இன்கண் இமிழ்விற்கு எதிர்வ பொருவி.....மேறுமாறிமிழ்ப்பக் கவர்தொடை நல்யாழ் இமிழக்காவின் புகர்வரி வண்டினம் பூஞ்சினை இமிர - ஊதுசீர்த் தீங்குழல் இயம்ப மலர்மிசைத் - 40 தாதுது தும்பி தவிர்பல இயம்ப 蟲龜蟾 強過婚總過龜龜畿龜.துடிச்சீர் நடத்த வளிநடன் மெல்லினர்ப் பூங்கொடி மேவர நுடங்க ஆங்கவை தத்தம் தொழில்மாறு கொள்ளும் o, தீம்புனல் வையைத் திருமருத முன்துறையால்; 45 - மார்ச்சனை பொருந்திய திரட்சியமைந்த முழவினது இனிய கண்ணிடத்திருந்து எழுகின்ற முழக்கத்திற்கு எதிராக ஒலித்தலைப் போல மேகங்கள் ஏறுமாறாக இடிகளை முழக்கின. மனங் கவர்வதும், தொடர்ச்சி கொண்டதுமாகிய நல்ல யாழினின்றும் இன்னிசை எழ, அதற்கு எதிராகப் புள்ளிகளையும் வரிகளையும் கொண்ட வண்டினம் பூக்களைக் கொண்ட மரக்கிளைகளிலி ருந்து இமிர்தலைச் செய்தன. ஊதுதற்குரிய சீரினைக் கொண்ட இனிய குழலினைச் சிலர் ஊதத்தொடங்க, மலர்மிசைத் தாதினை ஊதுகின்ற தும்பியினம் இடைவிடாது இசைத்தன. துடிப்பறை யினைச் சிறப்போடு இயக்கிச் சிலர் தாளக்கட்டோடு முழக்க,