பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புலியூர்க்கேசிகன்- ཡfiurt-༡) ཡ(༡༧ཆ༅། (2) 223 விளக்கம் : சேடப் பெருமானின் சிறப்பைக் கூறும் பகுதி இது. அவனைத் தொழுது போற்றுவர் மக்கள் என்று கொள்க. இதில் வரும் பல செய்திகளைப் புராணங்களுட் காண்க நின்னைப் பரவுதும் அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி 80 நல்லடி ஏத்திநிற் பரவுதும் எல்லேம் பிறியற்கவெஞ் சுற்மொடு ஒருங்கே, (இது ஆசிரியச் சுரிதகம்) அச்சம் தருதலையுடைய அரிய தன் ஆயிரம் தலைகளையும் படமாக விரித்து நினக்கு நிழலைச் செய்திருப்ப வனும், கூட்ட மாகப் பொருந்திய சுற்றத்தை உடையோனுமாகிய, பெருமையிற் சிறந்த ஆதிசேடனை யாமும் வணங்கி, நின் நல்ல திருவடிகளை ஏத்தி நின்னைப் போற்றுவோம். யாம் எல்லாரும், எம் சுற்றத் தோடு ஒருங்கே என்றும் நின் திருவடிகளைப் பிரியா திருக்க வேண்டும் என்பதற்காகவே, நின்னைப் போற்றிப் பணிவோம். பெருமானே! இந்தச் சிறப்பை எமக்குத் தந்தருள்வாயாக! சொற்பொருள்: அணங்கு-கண்டாரை அச்சமுறச்செய்யும் தெய்வப் பெண்; அத்தகைய அச்சத்தைக் குறித்தது. கணம் - கூட்டம். அண்ணல் - தலைவன், சேடப் பெருமான். விளக்கம் : பெருமானின் நல்லடியிற் பிரியாதிருக்கும் பேற்றை வேண்டுவோர், அவனைத் தாங்கியும், அவனுக்கு நிழல் செய்தபடியும் விளங்கும் ஆதிசேடப் பெருமானையும் போற்றிப் பணிவர் என்று கொள்ளல்வேண்டும். பெருமானை என்றும் பிரியாதிருக்கும் அச் சேடப் பெருமானைப் போலேவே, தாமும் என்றும் பிரியாதிருக்கும் இன்பத்தைப் பெறுதல் வேண்டும் என்பதே, அடியவரது ஆரா விருப்பமாகும். - - (2) வையை தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் சூத்திர உரைப்பகுதியுள், உரையாசிரியர் இளம்பூரணனார் எடுத்துக் காட்டியுள்ள செய்யுள் இது. இதனைப் பாடியவர், இதற்கப் பண் வகுத்தோர், அவர் வகுதத பண்ணின் வகை முதலியன யாவும் தெரிந்தில. - - - - ஒரு தலைவன் தான் விரும்பிய பரத்தையோடுங் கூடிய வனாகச் சென்று புதுப்புனலாடிக் களித்தான்; அதனையறிந்தாள் தலைவி. அவள் உள்ளம் வெதும்பிற்று. அவள் தலைவன் பாற் சினங்கொண்டு ஊடினாள். அவளை மீண்டும் நாடி வந்தான் தலைவன். அவள் சினத்தைக் கண்டான்; தன் பிழையால்