பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புலியூர்க்கேசிகன் 女 ཡfiunt-༧ ཡ(ཀྱཚོ་ཆམོ། (2) . 225 கடைத்தெருக்கள் எல்லாம் நீரணிக்குரியவான பலவகைப் பொருட்களையும் மிகுதியாகக் கொண்டவாக விளங்கின. அத்தெருக்களுள் மக்கள் நிரம்பி வழிந்தனர். தாந்தாம் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொண்டு, அவர்கள் வையையை நோக்கி விரைந்து செல்வாராயினர். - சொற்பொருள் : மலிபெயல் - மிக்க பெயல், ஏமம் - காவல். இகுத்தரல் - இழிந்தோடல். நாகம் - ஒருவகை மரம். மணிவரை - நீலமணியைப் போலத் தோன்றும் வரை, இது பெயலால் கழுவப்பெற்ற மலையின் தோற்றம். காமரு விரும்பத் தகுந்த, காமரு வையை - இருசார் கரைப் பகுதிகளிலும் பூங்காக்கள் நிரம்பிய வையையும் ஆம் தார் தூசிப் படை மாலையும் ஆம் அப்போது தாரணி கொண்ட உவகைக்குப் போகத்திற்குரிய தாரினை அணிந்துகொண்டதனால் எழுந்த போகவிருப்ப்ாகிய உவகை என்க. நீர் அணி கொண்ட நீரால் அழகு பெற்றுத் திகழ்ந்த அழகு நீராலும், அதனோடு வரும் மலர்த் திரளாலும். அங்காடி - கடைத் தெரு. - - - விளக்கம் : முதுவேனில் கழிந்ததும் வரும் புதுப்புனல் வரவாதலால், வேனிற் கொடுமையை அநுபவித்த மக்கள், உவகையோடு புனலாடச் செல்வாராயினர் என்க. பிற நாட்டைப் பற்றச் செல்லும் படையினர் அணியணியாகத் திரண்டு செல் வதைப்போல, ஆடவரும் மக்களும் அணியணியாக, ஒருவருக் கொருவர் முற்படச் செல்லும் விரைவுடனும், நீராடற்கேற்ற புனைவுகளுடனும் சென்றனர் என்க. துறையை முற்றினர் கைபுனை தாரினர் கண்ணியர் ஐயெனும் ஆவியர் ஆடையர் நெய்யணி கூந்தலர் பித்தையர் மெய்யணி யானை மிசையராய் ஒய்யெனத் தங்காச் சிறப்பின் தளிரியலார் செல்லப் 15 பொங்கு புரவிப்புடைப் போவோரும் பொங்குசீர் வையமும் தேரும் அமைப்போரும் எவ்வாயும். பொய்யாம்போய் என்னாப் புட்ைகூட்டிப் போவநர் நெய்யாப்பு மெய்யார மூடுவார் வையத்துக் . கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் . 20 ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு ஓடுவார் ஓடித் தளர்வார்போய் உற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக் கற்றாருங் கல்லாதவரும் கயவரும் பெற்றாரும் பெற்றாற் பிழையாத பெண்டிரும் 25