பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 . . . - பரிபாடல் மூலமும் உரையும் சிறிதானும் நீர்நிறம் தோன்றாதிவ் வையை யாறு: மழைநீர் அறுகுளத்து வாய்பூசி ஆடும் கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் வழிநீர விழுநீர அன்று வையை, - வையையிற் பலரும் திரளாகச் சென்று நீராடுகின்றனர். அவர்கள் பூசியிருந்த சாந்தமும், மணங்கமழும் மாலைகளும், கோதைகளும், சுண்ணப் பொடிகளும், கழிந்த ஆடவர் பெண்களின் தலைமயிர்களும், அவற்றிற் சூடியிருந்தது வீழ்ந்த பூக்களுமாகக் கலந்து நீர் கலங்கலாகிச் செல்லும் சிறிதளவேனும் நீரின் இயல்பான நிறம் தோன்றாது. மழையற்றமையினாலே நீரற்றுப்போன குளத்திலுள்ள சிறிதளவான நீரில் வாய் கழுவியும், நீராடியும், கழுவிப் போக்கும் தன்மை வாய்ந்த மஞ்சனங் குங்குமமாகிய கலவைகளைக் கழுவி விட்டும், அதனைக் கலக்கிவிட்டால் எவ்வாறு விளங்கும்? அவ்வாறே வையையில் வழிந்துசெல்லும் நீரும் கலங்கல் நீராகச் சென்றதேயன்றித் தூய நீராகக் காணப் பெறவில்லை. - , சொற்பொருள் : சுண்ணம் - வாசனைப் பொடி மஞ்சனம் - தேய்த்துக் குளிக்கும் மணப்பொடி, மஞ்சளும் பிறவும் கலந்தது; மஞ்சனம் ஆயிற்று. வழிநீர் வழிந்தோடும் நீர். -

  • இந்திரனும் பாண்டியனும் . வெருவரு கொல்யானை வீங்குதோள் மாறன் 90 : உருகெழு கூட லவரொடு வையை - வருபுனலாடிய தன்மை பொருவுங்கால் இருமுந்நீர் வையம் படித்தென்னை யானுர்க்கு ஒரு நிலையும் ஆற்ற இயையா வருமரவின் அந்தர வானியாற்று ஆயிரங் கண்ணோன் 95 இந்திரன் ஆடும் தகைத்து. - . கண்டார் அஞ்சத் தகுந்த கொல்யானைகளையும், பருத்த தோள்களையும் கொண்டவன். பாண்டியன். அவன் அழகு பொருந்திய க்கூடல் நகரத்துத் தன் உரிமை மகளிரோடுங் கூடிச் சென்று, வையையிலே வந்த புதுப்புனலின் ஆடிக் களித்தான். அந்தச் சிறப்புக்கு இணையாக ஒன்றைக் கூறக் கருதினான். -

கடலாற் சூழப்பெற்ற இப் பூவுலகெல்லாம் ஆராய்ந்தாலும் யாதும் பயனின்று, அதுதான் இக் கூடலுக்கு ஒரு வகையானும் பொருந்துவதின்று. தேவயானையின்மீது வருவோனும் வானத்துத் தேவகங்கையின்மீது வருவோனும், வானத்துத் தேவகங்கையில் அந்தர மகளிரோடு நீரோடுவோனுமாகிய இந்திரன், தேவ மகளிரோடுங் கூடி நீராடியசெவ்வி போன்றதென்று வேண்டு மாயின் சொல்லலாம். .