பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - - பரிபாடல் மூலமும் உரையும் சொற்பொருள் :நோன்மை வலிமை கலி - கலக்கம் கடும்பு - சுற்றம் கொடும்பாடு கொடுமைப்பாடு மாறுபாடு. விளக்கம் : அறிவு மாறுபடாதிருக்க அருளுமாறு வேண்டுகின்றார் ஆசிரியர். அறிவு தெளிவாயின் செயலும் சிறப்பாகும்; அதனால் அனைத்தும் சிறக்கும் என்பதாம். இங்க்ே கடும்பென்றது அடியவர் திருக்கூட்டத்தினை 'கலியில் நெஞ்சி னேம் என்றதனை நினைவிற்கொள்க. கலிகொண்ட நெஞ்சினர் எக்காலத்தும் கடவுளருளைப் பெறமாட்டார். அக் கலிதான் நீங்கு தற்கும் கருணைக்கடலான பெருமானின் இன்னருள் நோக்கம் முதற்கண் வேண்டும் என்பதாம். அறிவு என்பதே தெளிவைத் தருவதுதான். அதன்கண் தெளிவுகுன்றி மயக்கம் ஏற்படும்போதே கொடும்பாடுகள் கிளைக்கின்றன. தோன்றாத துணையாய் உள்ளிருந்து இயக்கும் இறைவன் அதனைக் களைய முற்படுகிறான். உயிர் அதற்கு உட்படும்போது மயக்கம் விலகுகின்றது; அதற்கு விலகிச் செல்லும்போது இருள் சூழ்கின்றது; இருளின் விளைவான நலிவுகளும் பிறவும் அலையலையாக எழுந்து வருத்துகின்றன. இதனின்றும் விடுபட இறைவனை உள்ளத்தானாக உணர்ந்து அவன் அடியுறை நிலையினை முற்றவும் புகலாக அடைதல் வேண்டும் என்பதாம். மூன்றாம் பாடல் திருமால் வாழ்த்து)ே பாடியவர் : கடுவன் இளவெயினனார்: பண்வகுத்தோர் : பெட்டகனார்; பண் : பண்ணுப் பாலையாழ். மாயோனே! மாயோனே! மாஅயோயே! மாஅயோயே மறபிறப் பறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மாஅயோயே! மாயவனே! மாயவனே! உயிர்க்குலத்தின் மீளeளப் பிறக்கும் பிறவிகளாகிய தலையை அறுத்து, அவற்றை அத்துயரி னின்றும் விடுவிக்கும் குற்றமற்ற சிவந்த பாதங்களையும், நீலமணி போலத் திகழும் உருவினையும் கொண்ட் மாயோனே! - சொற்பொருள் : மறுபிறப்பு-தொடர்ந்துவரும் பிறப்பு: இது வினைகாரணமாக வந்தமைவது; வினைக்குத் துண்டுவது மாயா காரியமாகிய உடலும், அதன் உறுப்புக்களாகிய ஐம்பொறிகளும் மணி - நீலமணி. - -