பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் வாழ்த்து (3) - 31 அமரர்க்கு முதல்வன்! அணி நிழல் வயங்கொளி ஈரெண் தீங்கதிர்ப் பிறைவளர் நிறைமதி உண்டி . . . அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வன் நீ; - அழகிய குளிர்ந்த ஒளி விளங்கும் பதினாறு இனிய கதிர்களை உடைய பிறைகளாகி, வளர்கின்ற நிறைமதியமான உணவினை உண்பர் அமரர். அழகிய மணிகள் பதித்த பசும்பூண்களை அணிந்தவரான, அழகிய மணிகள் பதித்த பசும்பூண்களை அணிந்தவரான, அவ்வமரர்க்குத் தலைவனாக விளங்குபவனும் நீயே யாவாய்! - - - சொற்பொருள் : நிழல் - தன்மை குறித்தது. பிறை - கலை. நிறைமதி முழு நிலவு உண்டி உணவு அழுது விளக்கம் : தேவர்கள் சந்திர கலைகளின் மூலமாகவே தமக்குரிய உணவான அமுதத்தைப் பெற்று உண்பார்கள் என்பது புராணம். n - . - அனைவர்க்கும் முதல்வன்! திணிநிலம் கடந்தக்கால் திரிந்தயர்ந்து அகன்றோடி நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ்பு அவிழ்தண்தார் 55 அன்னவர் படஅல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ; அதனால், பகைவர் இவர், இவர் நட்டோர் என்னும் வகையும் உண்டோ, நின் மரபறி வோர்க்கே? அணுச்செறிவால் விளங்குவது இம் மண்ணுலகம். முன் காலத்தே நின் திருவடிகளால் இதனை அளந்தனை. அப்போது, நீ எடுத்த பேருருவைக் கண்டனர் அவுணர்கள். தங்கள் மனங் கலங்கியவர்களாகத் தளர்ந்தனர். இவ்வுலகையே கைவிட்டு வெளியேறி ஓடி மறைந்தனர். - - நின் ஆற்றலுக்கு அஞ்சிய அவர்கள், கடலுட் பாய்ந்து உயிர்பிழைக்கவும் முயன்றன்ர். கட்டு நெகிழ்ந்து அவிழ்ந்து வீழும் குளிர்ந்த மாலையின் பூக்களைப்போல அவர்கள் கடலுள் சிதறி வீழ்ந்து ஒழிந்தனர். எஞ்சிப் பிழைத்தோர் நின்னைப் பணிந்தனர். அவர்கட்கும், அஞ்சி மாண்டோர்க்கும் முதல்வன் நீயே ஆவாய். அதனால், நினக்குப்பகைவர் இவரெனவும்,நட்பினர்.இவர் எனவும் கருதப்படும் ஒரு முறைமையும் யாதும் உளதோ? நின் மரபினை அறிவோர்க்கு இவ்வாறு கருதும் முறைமை என்பது யாதுமே இல்லை. அவுணர் நினக்குப் பகைவரும் அல்லர் அமரர் நினக்கு நட்பினரும் அல்லர் அனைவருக்கும் முதல்வன் நீயே யாவாய்! - - - -