பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதுமாம். 36 - - - பரிபாடல் மூலமும் உரையும் நான்காம் பாடல் திருமால் வாழ்த்து (4) பாடியவர் : கடுவன் இளவெயினனார்; பண் வகுத்தவர் : பெட்டகனாரி, பண் : பண்ணுப் பாலையாழ். நன்கு அறிந்தோம் ஐந்திருள் அறநீக்கி, நான்கினுள் துடைத்துத் தம் ஒன்றாற்றுப் படுத்த நின் ஆர்வலர் தொழுதேத்தி நின்புகழ் விரித்தனர் கிளக்குங்கால் அவை நினக்கு இறும்பூது அன்மைநன்கு அறிந்தேம்.......... .. - ஐம்பொறிகளாலும் உண்டாகின்ற மயக்கமாகிய அஞ்ஞான இருளை முற்றவும் அறப்போக்கி, நான்கு குணங்களாகிய அவற்றை மேற்கொள்ளலினாலே உள்ளத்தின் அழுக்கைத் துடைத்துத், தம்மைத் தியானமாகிய ஒப்பற்ற நெறியினிடத்தே ஒன்றுபடுத்தியவர் நின் அன்பர். அவர், நின் திருவடிகளைத் தொழுது போற்றி, நின் புகழையும் பலவாக விரித்துச் சொல்லியுள்ளனர். - அவற்றை யாமும் எடுத்துச் சொல்லுங் காலத்தே, அவை யெல்லாம் நினக்குச் சிறப்பில்லர்த ஒரு நிலையினை நன்றாக அறிந்தேம் - - சொற்பொருள் : ஐந்து - ஐம்பொறிகள் மெய், வாய், கண், மூக்குச், செவி என்பன: இவை ஆசைகளை எழுப்பி அறிவை மழுங்கச் செய்வன. ஆதலின், இருள் என்றனர். நான்கு - நான்கு குணங்கள்; இவை மைத்திரி, கருணை, முதிதை, உபேட்சை என்பன; அனைத்துயிரிடத்தும் நட்புக் கோடல் மைத்திரி; அனைத்துயிருக்கும் இரங்கி அருளுதல் கருணை; அனைத்திலும் இன்பங்காணல் முதிதை, பொருள்களிடத்துப் பற்றற்றிருப்பது உபேட்சை. இவற்றை மேற்கொள்ள, உள்ளத்திருள். தானே அகலும் என்பது சான்றோர் கண்ட தெளிவு. ஒன்று - கடவுள் தியானம், மனத்தைத் தியான நிலையில் ஒருவழிப்படுத்தல்; இது இறைடியார் இயல்பு. இறும்பூது - வியப்பான களிப்பு. - விளக்கம் : நின் அடியவர் நின்னைப் பலவாறு போற்றித் துதிக்கினும், நீ அவற்றைக் கடந்து நிற்பவனாதலின், அவற்றையே மீட்டும் சொல்லுதல் நினக்குக் களிப்புத் தருவதன்று என்பதாம்; ஆயினும், எம் ஆசை காரணமாகச் சொல்லுகின்றோம்