பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் திருமால் வாழ்த்து (4) 41 - அவனது இடையிற் கச்சாகக் கட்டப்பெற்றிருப்பதும் ஒரு பாம்பு அவன் தோள்வளையாக விளங்குவதும் பாம்பு. அவன் முடிமேல் விளங்கும் தலைமாலையும்பாம்புகளால் ஆயது. பிற அணிகலன் களும் யாவும் பாம்புகளே! அவன் தலைமேலாக விளங்கும் 'சூட்டு’ என்னும் அணியும் பாம்பு. அவன் சிறகுகளின் மீது அணிந்திருக்கும் அணிகளும் பாம்புகள். பாம்பினது பகையின் செருக்கை அழித்தோனே! பசிய பொன் அணிகலன் அணிந்த நின் இருக்கையாகும் கருடன், தனக்கு இரையாகத் தாக்கிக் கொள்ளுவதும் பாம்பேயாகும். - சொற்பொருள் :விடம் நஞ்சு உவணம்-கருடன் வலந்தது - கட்டியிருப்பது. மடி - வயிறு. தொடி - தோள்வளை படிமதம் பகையாகிய, வலிமை. பசும் பூண் - பசும் பொன்னா லாகிய அணிகள். - - விளக்கம் : கொடிய நஞ்சுடைய பாம்புகளை இவ்வாறு கொண்டிருப்பதனால், நின் கருடனைக் கண்டு, பகைவர் அஞ்சி நடுநடுங்குவர்.என்பதாம். வேறு வடிவு இல்லையே! கடுநவை அணங்கும் கடும்பும், நல்கலும் - கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் 50 உள்வழி உடையை, இல்வழி இலையே; போற்றோர் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்றேம் ஆற்றல் இலையே; நினக்கு மாற்றோரும் இலர், கேளிரும் இலர்; எனும் - வேற்றுமை இன்று; அது போற்றுநர்ப் பெறினே; 55 மனக்கோள் நினக்கென வடிவுவே றிலையே; மிகத் துன்பமுண்டாகுமாறு தாக்கி வருத்தும் சினமும், எளியோர்க்கு அருளும் இரக்கமும், கொடுமையும், செம்மையும், வெம்மையும், தண்மையுமாகிய இக் குணங்களை உடைய வரிடத்தே, நீயும் அவ்வக் குணங்களை உடையோனாக விளங்கு வாய். இவை யாதும் அற்றவரிடத்து, நீயும் அவ்வாறே யாதும் அற்றவனாக விளங்குவாய். - நின்னைப் போற்றாத பகைவரின் உயிரை நீ போக்குதல் என்பதும் இல்லை; நின்னைப் போற்றும் அன்பரின் உயிரை நீ காப்பதென்பதும் இல்லை. ஏனெனில், நினக்கு மாற்றார் என்பாரும் யாருமிலர் நினக்கு உறவானவரும் யாரும் இலர். - யாவரிடத்தும் ஒருதன்மைத்தாகவே விளங்கும் நின் னிடத்து அவ் வேற்றுமையும் இல்லை. இந்த உண்மையை உணர்ந்து நின்னைப் போற்றும் அடியார்கள், நின்னை நினைத் தலைப் பெற்றால், அவரவர் மனக்கோட்பாட்டின்படியே,