பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lయgiఉడికి • ఏమడిమి (5) 45 செய்வதுபோல அழுமாறு, நின் வேலைச் சுழற்றி ஒலியோடு விட்டெறிந்தனை. அனைவருக்கும் துன்பத் தையே செய்தலை இயல்பாகக் கொண்ட சூரன், தன் அச்சந்தரும் உருக்கரந்து, அசையும் மாமரமாகி நின்றான். அம் மாமரம் வேரோடும் வெட்டுப்பட்டு வீழ்ந்தொழியும்படியாக, நின் வேலினை நீயும் அந்நாளிலே எறிந்தனை - சொற்பொருள் : பாய் - பரந்த இரும் பெரிய கரிய வெனினும் ஆம்.பனி-குளிர்ந்த புக்கு புகுந்து சென்று சேயுயர் மிகவுயர்ந்த பிணிமுகம் - முருகனுர்ந்த களிற்றின் பெயர்; பகைவர்க்கு நோய் செய்யும் முகத்தோற்றத்தைக் கொண்டது என்பது கருத்து. துவைப்ப ஒலிக்க திரிய - சுழன்று செல்லுமாறு. தீயழல் துவைப்ப என்றது. தீக் கொழுந்து விட்டுவிட்டு ஒளி செய்தபடி, வேல் கடுவிரைவுடன் சென்றது என்பதாம். நோய் துன்பம் நுடங்கல் - அசைதல், சூர் - சூரன். தபுத்த கொன் விளக்கம்: வெற்றியே பெற்று வந்தோரும், கொடியோரும், மாயத்திலே வல்லோருமான அவுணரை அடியோடு அழித்த வெற்றி வேலினை உடையை ஆதலின் எளியேமாகிய எம்மைக் காத்தல் நினக்கு மிக மிக எளிது என்பதாம். - - - வரை உட்ைத்தோய் நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து மலையாற்றுப்படுத்த மூவிரு கயந்தலை 10 மூவிருதயந்தலைமுந்நான்கு முழவுத் தோள் - ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை! நாவலந்தீவு என்னும் பெயரைக் கொண்டது, குளிர்ந்த சோலைகளைக் கொண்டது, இந் நிலப்பகுதி. இதன் வடக்கின் கண்ணதாகிய பொழிலொன்றினிடத்தே, கிரவுஞ்சம் என்கின்ற பறவையின் பெயரினைப் பெற்றதாக உயர்ந்து நின்றது ஒரு பெருமலை, அப் பெருமலையினை உடைத்து, அதனிடையே வழியினை அமைத்த ஆறுமுகங்களை உடையோனே! . மென்மை கொண்ட ஆறு தலைகளையும், முழவனைய பன்னிரு தோள்களையும், இளஞாயிற்றின் செவ்விய அழகைப் போன்ற நிறவழகையும் கொண்டோனே! தாமரை மலரிடத்தே பிறந்தே பிறப்பினைக் கொண்ட பெருமானே! - சொற்பொருள் : நாவல் - நாவன்மரம். குருகு - கிரவுஞ்சம். கயம் - மென்மை. குங் - இளஞாயிறு ஞாயிற்றேர் நிறத்தகை நளினம் எனத் தாமரைக்குக் கூட்டியும் உரைக்கலாம். நளினம் - தாமரை. . . . . . . -