பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Louiscaso o osáceis (5)_ 51 திருத்தமான செங்கோன்மையை உடையவனான எமன், தன் உடம்பினின்றும் ஒரு கூற்றைப் பிரியச்செய்து, அதனைக் கரிய கண்களை உடைய வெள்ளாட்டுக் குட்டியாக்கி நினக்குக் கொடுத்தான் - - சொற்பொருள் : ஆராஉடம்பு - முதிராத குழந்தைப் பருவத்து உடல். ஆர்தல் - நிறைதல். புரந்தரன் - இந்திரன்: தேவரைக் காப்பவன். அல்லல் - துன்பம். வாரணம் - கோழிச் சேவல் பொறி-புள்ளி. ஞமன் - எமன் மறி - குட்டி விளக்கம் : தோற்றோர் போரிக்கண் வென்றோனுக்குத் திறையளந்து தம் அடிமைத் தன்மையைத் தெரிவிப்பர். அவ்வாறே, தேவர் தலைவர்கள் முருகப் பெருமானுக்குச் சேவலும் மயிலும் ஆடுமாகிய இவற்றை அளித்தனர் என்பதாம்.

எல்லைகடந்த புகழோய் ஆஅங்கு, அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறிவரிச் சாபமும் மானும் வாளும் 65 செறியிலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் - தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும் வேறுவேறு உருவின்இவ் வாறிரு கைக்கொண்டு மறுவில் துறக்கத்து அமரர் செல்வன்றன். - பொறிவரிக் கொட்டையெடு புகழ்வரம்பு இகந்தோய்; 70 அவ்வாறாக, முற்கூறிய தீக்கடவுள் ஆகியோரும், மற்றைத் தேவரும் விருப்போடுங் கூடியவராகப் படைகளை அளித்தனர். ஆட்டுக்குட்டியும், மயிலும், கோழிச்சேவலும், முத்திரையோடுங் கூடியதான கட்டமைந்த வில்லும், தோமரமும், வாளும், தழைமாலை யணியப்பெற்ற ஈட்டியும், குடாரியும், கணிச்சி என்னும் மழுவும், எரிக்கும் கதிர்களைச் சொரியும் கனலியும், வெவ்வேறு உருவினவாகிய இவற்றை நின் பன்னிருகைகளிலும் நீயும் ஏந்திக் கொண்டனை. குற்றமற்ற தேவருலகுக்கு உரியோனாகிய இந்திரனது புகழின் எல்லையையும், தாமரைக் கொட்டையை விட்டு நீங்காதே கிடந்த அந்தக் குழவிப் பருவத்திலேயே கடந்து நின்ற புகழுடையோனே! சொற்பொருள் : அமர்ந்து விரும்பி சாபம் வில், மரன் - தோமரம். குடாரி - கோடரியும் ஆம். கணிச்சி - மழு, கனலி - கனலியை ஏந்திக்கொண்டு என்பதாகும். -