பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46giâ€ಹಕಿಹ6: * ೧೧೧ು (6) 57 சொற்பொருள் : தொடி - வளையல் செறிப்ப - அழுத்த, இயங்க - மேல்கீழாக அசைய, ஒலிக்க கொடி - தொய்யிற் கொடி திருக்கோவை - அழகிய சரம், மேகலையும் ஆம். உகிர் - நகம். கொடிறு-கன்னம் அளறு சந்தனக்குழம்பு, இலை-தழைமாலை. நிறை - மனவுறுதியாகிய தன்மை, நிறுத்தும் செவ்வியால் நிறை ஆயிற்று. கரைச்சிறை - கரையாகிய தடை சிறை - சிறகரும் ஆம்: ஆற்றின் இருமருங்கும் விளக்கும் கரைகள் சிறகரைப் போன்று விளங்கும் என்க. ஊர் ஊர் மக்கள். விளக்கம் : வையைப் புதுவெள்ளத்தில் ஆடித் திளைக்கச் செல்வாரான காதலர், தம்முள் தழுவிக் கலந்து செல்வதனால், அவர் அணிகளும் பிறவும் தம்முட் கலந்து மயங்கின என்பதாம். அவர், தம் நிறையழிந்து, ஆர்வத்தாலே எல்லை கடந்து சென்றது போலப், புது வெள்ளமும் கரையாகிய எல்லையைக் கடந்து செல்லத் தொடங்கியது என்பதுமாம். இதனால், நீராடச் செல்லும் இவரது ஆரவாரத்துடன், கடையடைக்க வருகவென்ற பறையொலியும், கூச்சலுமாக எங்கணும் நிறைந்து, மதுரை நகரமே ஒலிமிக்கதாயிற்று என்பதுமாம். - செல்வார் தன்மை அன்று, போரணி அணியின் புகர்முகம் சிறந்தென 25 நீரணி அணியின் நிரைநிரை பிடிசெல - ஏரணி அணியின் இறையரும் இனியரும் ஈரணி அணியின் இகல்மிக நவின்று தணிபுனல் ஆடும் தகைமிகு போர்க்கண் . துணிபுனல் ஆகத் துறைவேண்டு மைந்தின் 30 அணியணி யாகிய தாரர் கருவியர் அடுபுனல் அதுசெல அவற்றை இழிவர் கைம்மான் எருத்தர் கலிமட மாவினர் நெய்ம்மாண் சிவிறியர் நீர்மணக் கோட்டினர் - வெண்கிடை மிதவ்ையர் நன்கிடைத் தேரினர் 35 சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை ஓரியவு உறுத்தர ஓருர்பு இடந்திரீஇச்புது வெள்ளத்தின் வரவாகிய அந்நாளிலே அன்ைவரும் வையையை நோக்கிப் பயணமாயினர். போருக்குரிய அணிக ளாலே களிறுகள் ஊக்கமிக்குச் செல்வதைப் போன்று, நீரணி விழவுக்குரிய அணிகளாலே ஊக்கமிக்கவான பிடியானைகள் வரிசை வரிசையாக வையையை நோக்கிச் செல்லலாயின. அழகாக அணிந்த அணியினரான இளைஞரும், அவருக்கு இனியரான அவர்தம் காதலியரும், நீராடுதற்குரியவான அணியினை அணிவாராயினர். நீர் விளையாட்டாகிய போரைப் | |