பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பரிபாடல் மூலமும் உரையும் பனித்துப் பணிவாரும் கண்ணவர் நெஞ்சம்" 85 கன்ற்றுபு காத்தி வரவு: ஆற்றது ஒடும் இனிய நீரினிடத்தே, நீரினது வேகத்தால் இழுத்துச் செல்லப்படுகின்ற ஒரு கட்டுமரத்தைப்போல நீயும் நின்னைப் பற்றிக்கொள்ளுதலில் வல்லாராகிய மகளிரது வயப்பட்டு, அவருக்குப் புணையாக அமைந்த மார்பினை உடையவன் ஆயினை என்னை நினைந்து சற்றும் வருந்தாயாய், இரவுப்பொழுது முற்றவும் அவருள் ஒருத்தியது வீட்டிடத்தேயே அவரோடும் கூடியிருந்தனை. வையைக் கரையிலுள்ள மடை யானது உடைந்தவிடத்து, உடைந்த அதனை அடைத்த விடத்தும், அதன்பின்னரும் அவ்விடத்தேகசிந்து ஒழுகும் நீரினை அறிவாய். அவ்வாறே, அவரைவிட்டுப் பிரிந்து இவ்விடத்துக்கு வந்தவிடத்தும், அவருக்குப் பிரிவாகிய துன்பத்தைத் தந்து வருத்தமுறச் செய்தனை. அத்துன்பம் நீங்க, நீதான் அவரை மீளவும் சென்று பொருந்திய விடத்தும், அதற்கு மகிழாராய், நீ தான் மீளவும் பிரிவாயோ’ எனக் கலங்கிக் கண்ணிர் சோர வருந்துவர்.அவர். அத்தகையாரது நெஞ்சம் மீளவும் கொதிப் படையாமற் காத்தனையாய் விளங்குக! இங்கே வருதலைக் கைவிடுவாயாக! - - - - சொற்பொருள் : செல்யாறு ஓட்டமுடைய ஆற்று நீர், செல்மரம் - செல்லுகின்ற கட்டுமரம். வவ்வு வல்லார் - அதனைக் கைப்பற்றிக் கொள்ளுதற்கு வல்லார். பனி துன்பம் மலிரும் கசிந்தொழுகும். பிசிர் நீர்த்துளிகள். அனற்றினை வெம்மை யுறச் செய்தனை. பனித்து - வருந்தி. கனற்றுபு - கொதிக்கச் செய்தலை, காத்தி - காப்பாயாக. - - - விளக்கம் : ஆற்று நீரிற் சிக்கிஅலமருவார். அவ்விடத்தே வெள்ளத்தே வரும் கட்டுமரத்தைக் கண்டதும், விரைந்து அதனைப் பற்றிக்கொள்ள முயல்வர்; வல்லார் அதனைப் பற்றிக் கொண்டு இன்புறுவர். அவ்வாறே தலைவனையும், அவனை விரும்பியடைய முயன்ற பரத்தையருள், கொளற்கு வல்லாள் ஒருத்தி கைப்பற்றிச் சென்றனள் என்பதாம் உடைந்த மடையை அடைத்த பின்னரும் நீர்க்கசிவு ஒழுகுபதுபோலத் தன். நிறைகெட்டு அவளோடு சென்று கூடியிருந்தவன், மீளவும் தன் வீட்டிற்கு வந்த காலத்தும், அவள் நினைவாகவே சுழன்றனன் என்பதாம். இதனை யறிந்த தலைவி அவனை வெறுத்தாளாய், 'மீளவும் அவளிடத்தேயே செல்க' எனக் கூறி ஊடுகின்றனள். தலை தொட்டேன் நல்லாள் கரைநிற்ப நான்குளித்த பைந்தடத்து நில்லாள் திரைமூழ்கி நீங்கி எழுந்தேன்மேல்