பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (7) 67 இவ்வாறு வையையை வேண்டுகின்றாள் தலைவி. இதனால் தல்ைவன் அக் காதற் பரத்தையுடனேயே வாழ்க என்றனள்; தான் அவனை ஏற்க விரும்பாமையினையும் உணர்த்தினள். - - - - - சொற்பொருள் : துணி - துன்பம். நனிகன்றல் - மிகவும் முற்றுதல். காமம் - காமவின்பம். அல்லா நெஞ்சம் - மயங்கிய நெஞ்சம் நீயல் - போகச் செய்தல். இல்லவர் - வீட்டினுள்ளார்; தோழியரும் பிறரும் கொடிவிடல் - தழைத்துப் படர்தல். - விளக்கம் : தலைவனுக்காகத் தூது வந்தவள் விறலி. அவளிடம் ஏதும் விடை கூறினாள் அல்லள் தலைவனுக்கும் காதற் பரத்தைக்கும் இடையே ஏற்பட்ட ஊடலைப் பற்றிக் கூறினாள். முடிவில், அது தெளிந்து அவள் அவனோடு களித்திருப்பதையும் சொன்னாள். இறுதியில் வையையை வாழ்த்துகின்றாள். இதனால், தலைவியின் மனக்குறிப்பை, ஊடற் சினத்தைத் தானறிந்த விறலி, தலைவனிடம் சென்று கூறுவாள் என்பதும், அவன், அதன் பின்னர்த் தானே வந்து அவள் ஊடலைத் தணிப் பதற்கு முயல்வான் என்பதும் இதன் முடிபாகும். ੈ। வையைப் புதுநீர் விழாவிலே, மதுரை நகரத்தார் ஆடிக் களிக்கும் களிப்பைக் கூறுகின்றனர்; அதன்மூலம் அக் காலத்துத் தமிழ்க் குடியினரின் வாழ்வியல் நலத்தையும், உளப்பாங் கையும் எடுத்துக் காட்டுகின்றனர். பெருநிலையினரான தலைவர்கள் தம் கற்பு மனைவியரை பன்றியும், பிற காமத் தொடர்புகளையும் உடையவராயிருந்தனர் என்பதும், அவரது அச்செயலைக் குறித்துத் தலைவியர் ஊடிச் சினந்தனர் என்பதும், அச்சினத்தைத் தணிவித்து, அவரை அடைவதற்குத் தலைவர்கள் முயன்றனர் என்பதும், அம் மகளிரும் தம் மேதகு கற்புச் செவ்வியினாலே தம் தலைவரின் பொருந்தா ஒழுக்கத்தைக் கடிந்து பேசியும், வெறுத்து ஒதுக்காதவராய் அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வர் என்பதும், இப்பாடலால் அறியப்படும். - - - ஏழாம் பாடல் வையை (7) பாடியவர் ; மையோடக் கோவனார்; பண் வகுத்தவர்: பித்தாமத்தர்; பண் : பாலையாழ். - தலைமகன் தலைமகளோடு பு துப்புனலில் -- மகிழ்த் தான். இதனைக் கேட்டதும், செவிலித்தாயின் உள்ளம் களிப் படைகின்றது. தன் மகளான தலைவியின் தோழியைத் தன்னருகே அழைத்தாள். தலைவனும் தலைவியும் புனலாடி இன்புற்றது