பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I புலியூர்க்கேசிகன் * செவ்வேள் (8). - 87 பலகாலும் அவ்வழிச் செல்வாயாதலின், இவளுடைய இத்தகையையும் கண்குளிரக் காண்பாயாக." சொற்பொருள் : சூள்வெளவல் - குறினைச் ಅಥಣ கொள்ளல்.பருவம்.காலம் இருந்தோட்டி-பெரிதான கட்டளை. 'எருமை இருந்து ஒட்டி' எனக் கொள்ளலும் ஆம். எள்ளியும் இகழ்ந்து அருள்தரும்; எமனை இகழ்ந்து போக்கி, அன்பர்க்கு அருளும். செருவம் மாறுபாடு, தூங்கும் தொங்கும். நிரைவளை - வரிசையாக அணியப் பெற்ற வளையல்கள்; அவற்றையுடைய தலைவியைக் குறித்தது. விளக்கம் : நின் பிழையையும் மறந்து, நின்மேற் சினவா திருக்குமாறு முருகனை அடிதொழுது வேண்டுவாளான, நின் காதலியது பெற்றிமையைக் காண்பாயாக’ என்பதாம். கானும் நீதான், இவ்ளை இனியும் பிரிவுத்துயரால் நலியுமாறு செய்து வருத்துவாயோ என்றலுமாம். - - வரைசேர்ந்து தொழுவார்! வளிபொருசேண்சிமை வரையகத்தால் - 90 தளிபெருகும் தண் சினைய . - பொழில்கொளக் குறையா மலரக் குளிர் பொய்கையள்றுநிறைய மருதம் நளிமணல் ஞெமர்ந்த நனிமலர்ப் பெருவழிச் - சீறடியவர் சாறுகொள எழுந்து 95 வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும் நாறுகமழ் வீயும் கூறுமிசை முழவமும் மணியும் கயிறும் மயிலும் குடாரியும் . 100 பிணிமுக முளப்படப் பிறவு மேந்தி அருவரை சேராத் தொழுநர், காற்றுப் பொருதும் உயர்மான உச்சிகளையுடைய பரங் குன்ற வரையின் உள்ளிடத்தாக மழைவளம் பெருகும். அதனாற் பொழில்கள் எல்லாம் தண்ணிய தளைகள் பொருந்திய கிளைகளைக் கொண்ட மரங்களை உடையவாய் விளங்கும். அவை குறைவற்ற மலர்களை உடையவாயும் விளங்கும். குளிர்ந்த பொய்கைகளுள் மழைநீர் சென்று பெருகுதலால், அவ்விடங் களிற் சேறு நிறையும். மழைநீர் மருதப் புறங்களிலும் சென்று பாய்தலால் அவ்விடத்தே மிக்க மணல் செறிந்திருக்கும். அம் மணலின் மேலாக மிகுதியான மலர்கள் வீழ்ந்து அழகு செய்திருக்கும். இவ்வாறாக மதுரைக்கும் பரங்குன்றிற்கும் இடைப்பட்ட மணல்பர்ந்த பெருவழி காணப்படும். |