பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பரிபாடல் மூலமும் உரையும் செம்மை கொண்டன. அவர்களின் முகம் தாமரை மலர்; அவர்கள் பாதங்கள் தாமரை மலர்; அவர்கள் தோள்கள் பொற்றாமரைக் குளத்துத் தாமரை மலர்; அவர்கள் உள்ளங்கை கள் தாமரை மலர்; அவர்கள் மார்பங்கள் கயத்து விளங்கும் தாமரை முகைகள் அவர்கள்செவ்வாய் ஆம்பல் மலர் இவ்வாறு கயத்துட் செல்லும் தாமரை மலரான பெண்களின் உறுப்புக்கள், புனலிடத்து மலர்ந்துள்ள தாமரை மலர்களோடு கலந்து, கட்புலனுக்கு வேறுபாடு தோன்றாவண்ணம் விளங்கின. இதனைக் கண்ட அவர்தம் காதலரும் நீருட் குதித்துத் தம் காதலியரைத் தழுவி எடுத்தனர். கூர்மையான பற்களை உடைய வரான அம் மகளிரின் குவிந்த முலைகளின்மேல் விளங்கும் பூண்க ளோடு, மதனனைப் போன்றோரான அவர்தம் காதலரின் மார்பு கள் பொருந்தி அழகு செய்தன. அவ்வேளை அவரணிகளும் தம்முட் கலந்து அழகு செய்தன. சொற்பொருள் : தமனியம் - பொன். செல்நீர்த் தாமரை - செலவயரும் தன்மை கொண்ட தாமரை, பெண்ணைக் குறித்தது. புலம் - கட்புலம். - - மன்னுக பரங்குன்றம்! அரிவையர் அமிர்த பானம் - 120 உரிமை மாக்கள் உவகையமிர்து உய்ப்ப மைந்தர் மார்வம் வழிவந்த செந்தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப என வாங்கு, - உடம்புணர் காதலரும் அல்லாரும் கூடிக் - 125 கடம்பமர் செல்வன் கடிநகர் பேண - மறுமிடற் றண்ணற்கு மாசிலோள் தந்த நெறிநீர் அருவி அசும்புறு செல்வம் மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா - தண்பரங் குன்றம் நினக்கு! - 130 அரிவையரின் இதழமுதாகிய பானத்தை, அதனை உண்ணு தற்கு உரிமையுடைய அவர்தம் காதலர்கள், உவகையோடு அமுதமாகக் கருதி, அவர் தரத் தாம் உண்டு களித்தனர். அம் மைந்தரது மார்பினைத் தழுவிப்பெற்ற இன்பத்தின் வழியாக வந்த எக்களிப்பு செந்தளிர்மேனியராகிய அம் மகளிரின் துன்பத்தைப் போக்கிற்று. - என்றிவ்வாறாக, .. ஒன்று கலந்து தழுவியின்புற்ற காதலரும், அவர்களல்லாப் பிற அடியவரும் கூடிக், கடப்பமரத்தின் அடிக்கண்ணே