பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - பரிபாடல் φουορώ உரையும் ஐயிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகள் மலருண்கண் மணிமறை தலைஇயென மாவேனில் காரேற்றுத் 10 தனிமழை தலையின்று தண்பரங் குன்று; பெரிதான இந் நிலவுலகமானது நிலைகெட்டு அழிந்து போகாமற்ப்டிக்கு, இதன் வடதிசைப் புறத்தே, உயர்ந்து ஓங்கிய அரிய நிலையினை உடையதும், உயரிய தெய்வத்தன்மை வாய்ந்த அணங்குகள் சிறப்புறப் பேணிக் காப்பதும், இடியேறுகள் சூழ்ந்திருக்கும் மிகவுயரிய முடிகளை யுடையதுமாகத் திகழும் இமயத்தினிடத்தே, உயர்ந்தோர் பலரும் வீற்றிருப்பார்கள். அவர்கள் ஏற்றுக் கொண்டாட, எரியொத்த செந்தாமரை மலரைப்போலும் திருமேனியினைக் கொண்ட இறைவனான சிவபெருமான், தன் சடையிடத்தே தாங்கித் தரைக்கண் வீழச் செய்த பெருவெள்ளமான கங்கை நீரானது, அப் பெருமானது விரித்த செஞ்சடைப் பொற்றையிடத்தே தோன்றித் தரைக்கண் விழுகின்ற ஒப்பற்ற மலரைப் போலத் தோன்றும். இவ்வாறாகக் கங்கையின் சீற்றம் தணியுமாறு தாங்கிக் காத்தவன், தானே தனிமுதல் என்னுஞ் சிறப்புடைய சலதாரி எனப் பெற்றனன். * நீலமணிபோலும் கறைவிளங்கும் கழுத்தையுடையோ னாகிய அத் தலைவனுக்கு, மதிப்புவாய்ந்த கார்த்திகை பெண் களிடத்தே தோன்றிய பெருமானே! நீதான் மையாகிய கரிய இழுதினைப் பூசிய இமைகளால் காக்கப்பெறும் மையுண்ட கண்களை உடையவளான, மான்மறியாகிய வள்ளிநாயகியை மணந்து கொண்டனை, அந்நாளிலே, ஆயிரங்கண்களை உடலிடத்துக் கொண்ட இந்திரனின் மகளாகிய தேவயானைப் பிராட்டியின் குவளைமலர் மையுண்டாற்போல் விளங்கும் கண்கள், மணிபோலும் நீர்த்துளிகளைச் சிந்தின. அதனைக் கண்டதும், பெரிதான அவ்வேனிற் காலத்தினும் மேகங்கள் திரண்டெழுந்து, தாமும் அழுவனபோல மிக்க மழையினைத் தண்ணிய இப் பரங்குன்றிடத்துப் பெய்தலைத் தொடங்கியதே. சொற்பொருள் : இரு நிலம் - பெருநிலமாகிய இந் நாவலந் தீவு. துளங்கல் கலங்கியழிதல், நிவத்தல் - உயர்தல். தெய்வத் தணங்கு - தெய்வத் தன்மை கொண்ட அணங்குகள். தலை காக்கும் சிறப்புறக் காக்கும். சிரம் - முடி உயர்ந்தவ்ர் தேவ இருடிகள்; இவரைச் சப்தரிஷிகள் என்பர். எரி செந்நெருப்பு. பெருவாரி - பெருவெள்ளம்; கங்கை போறை - பொற்றை. ஊழ்த்தல் தோன்றல். விழு சிறந்த சலதாரி - சலத்தைத் தரித்தவன்; சிவபிரான். ஆரல் - கார்த்திகைப் பெண்டிராகிய ரிஷி பத்தினிகள்! இவர் சிவகருவை ஏற்றுக் குழந்தைகளாகப் பெற்றெடுத்தது முற்பாட்டினும் கூறப்பெற்றது. இருநூறு - கரிய இழுது. மான்மறி - மான் குட்டி என்றது வள்ளி நாயகியை. மணி