பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

பல்லவப் பேரரசர்


9. கோவில்களும் சிற்பங்களும்

கோவில் அமைப்பும் தூண்களும்

நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் விருப்பங்கொண்டவனாக இருந்தான். இவன் முதலில் தந்தையைப் பின்பற்றிக் குடைவரைக் கோவில்களை அமைத்தான்; பிறகு பாறைகளையே கோவில்களாக அமைத்தான். இவனுடைய கோவில்களில் இவனுடைய விருதுப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மண்டபச் சுவர்களில் அழகிய சிலைகளும் வரிசை வரிசையாக அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் செதுக்கப் பட்டிருக்கும். மஹேந்திரன் தூண்கள் நீள் சதுரமாக இருக்கும். ஆனால், இவனுடைய தூண்கள் அங்ஙனம் இரா. அவற்றின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ் - தூணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடிப்பாகம் அமர்ந்த சிங்க உருவமாக இருக்கும்; சிங்கங்கள் தலைமீது தூண்கள் நிற்பனபோன்ற காட்சி அளிக்கும். சிங்கங்கள் திறந்த வாயுடன் இருக்கும். இத்தகைய சிங்கத் தூண்களைக் காஞ்சி - வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணலாம்.

I. குடைவரைக் கோவில்கள்

நாமக்கல் கோவில்

சேலம் ஜில்லாவில் உள்ள நாமக்கல் மலையில் வனக கடைவரைக் கோவில் ஒன்று இருக்கின்றது. அது