பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கலித்தொகை

பாட்டும் தொகையும் சங்க இலக்கியம் என வழங்கப் பெறும். பாட்டு எனப்படுவது பத்துப் பாட்டாகும்; தொகை எனப்படுவது எட்டுத்தொகை நூல்களைக் குறிக்கும். கலித்தொகை எட்டுத்தொகை நூல்களில் ஒன் றாகும். எட்டுத் தொகை நூலகளுள் பாவின் பெயரைப் பெற்ற தொகை நூல்கள் பரிபாடலும் கலித்தொகையு மாகும். கலித்தொகை, கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், கல்வி வலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்பெறும். அகன் ஐந்தினையாகிய அகப்பொருட் செய் திகளைப் பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த பாவாகத் தொல் காப்பியனார் கலிப்பாவினையும் பரிபாட்டிளையும் குறிக்கக் காணலாம்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்

-அகத்திணையியல் : 53

இந் நூற்பாகொண்டு தொன்னுா லாசிரியராம் தொல் காபபியனார் காலத்திற்கு முன்பேயே அகப்பொருள் இலக்கிய வழக்கில் கலிப்பாவும் பரிபாடலும் முதன்மை பெற்று விளங்கின என்பது தெரியவரும்.

шт.—8