பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானுTறு I 33

தொகையும் புறமும்

தொகை நூற்கள் எட்டனுள் பதிற்றுப்பத்து, புற நானுாறு, பரிபாடலில் சில பாடல்கள் ஆகியவை புறப் பொருள் நுவலுவனவாகும். இதில் பதிற்றுப்பத்தில் சேர அரசர்களின் வரலாறு மட்டும் கூறப்படுகிறது. புறநானுறே பழந்தமிழ் நாட்டின் வரலாற்று நிலையை

விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அகத்துள்ளும் புறக்கருத்துகள் பல வருகின்றன. து தின் காரணமாகவும் நாடுகாவல் காரணமாகவும் காதலரிடையே பிரிவு நிகழும் என்று வரையறுத் திருப்பது வீரத்திற்கு அகவாழ்வில் தந்த சிறப்பினை நன்கு உணர்த் தும் ஒன்றாகும். களவின் பின்னரே கற்பு என்பதுகூட வீரத்தின் அடிப்படையிலேயே தோன்றியது.

புறத்தில் போரும் போருக்கடிப்படையான வீரமும் சிறப்புப்பெற்றாலும் புறம் என்பது வெறும் போரைக் குறிப்பது மட்டுமல்ல. அறம்பொருள் இன்பம் என்று வகுப்பட்ட மூன்றில் அறத்தையும் பொருளையும் விரி வாகத் தன்னுள் ஆட்படுத்திக்கொண்டிருப்பது புறமே யாம். ‘புறமாவது மேற்கூறிய ஒத்த அன்புடையாராலே யேயன்றி எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு இஃது இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படும் பொருள்; அதில் அறனும் பொருளும் அட்ங்கும்’ என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் புறத்திற்கு விளக்கம் தருகிறார். (புறநானு று பதிப்பு: ப. 9)

‘போர் மட்டும் குறிப்பது புறமாகாது. புறத்திணை யினுள் கடவுள் நெறியும், அறவாழ்வும் பொருளின் தேவை யும் பேசப்படுகின்றன ... வெறும் போர் விளக்கமோ, அன்றிப் போர் வெறியோ பற்றிக் கூறாது, அப்போராற் றும் நல்ல வழிதுறைகளையும், அவற்றை அறத்தாற்றின் ஆற்றவேண்டிய அமைதியினையும், போராற்றுங்கால் புவி