பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பாட்டும் தொகையும்

தாப்போலி முறையேயாகும். புறமெதுவும் அகவகையாகா தது போலவே, அகமெதுவும் எனைத்துவகையானும், புற னிகாமையும் ஒருதலையாத் தேறப்படும். அகத்தில், தனி யகம், அகத்தகம், புறத்தகம் எனும் பாகுபாடின்மையால், புறத்துள்ளும் புறமேயன்றி, புறப்புறமும், அகப்புறமும் வேறுகோடலமையாமையறிக.மெய்ப்பொருள்-ஒளியிருள்பகலிரா என்பன போலவே, அகப்புறத்திணையொன்று கருதுமாறில்லை. இயல் வேறுப்பட்ட இருவகைத் திணை களைப் புணர்த்து அகப்புறமெனப் புதுவதோர் விரவுத் திணை வகுத்ததோடமையாமல், புறப்புறமெனவொரு வகை கோடல் எற்றுக்கு? அகத்தின் வேறு புறமாதல்போல, புறத்தின் வேறுபடுவது அகமேயாகும். மற்றைப்புறமென் பது பொருளில் கூற்றாம்’ என்று இப்பகுப்பின் முறையின் மையை விளக்குகிறார். (தொல்காப்பியரின் புறத்திணை, வகை முறை; தமிழ்ப் பொழில்; பதினைந்தாம் துணர் 1939 - 40; மலர் 3. பக்கம் 101) இதனால் புறத்திணை ஏழு என்பது புலனாகும்.

திணை-துறை

புறநானுாற்றுப் பாடல்களுக்கு அமைக்கப்பட்ட திணை - துறை வழக்குகள் தொல்காப்பிய நூலினை யொட்டி அமைக்கப்பெறவில்லை; பிற்காலத்துப் புறப் பொருள் இலக்கணமரபுரைக்கும் நூல்களைப் பின்பற்றிப் திணை - துறைகள் கூறப்பெற்றுள்ளன. இப்பொழுது இந்நூ லுள் காணப்பெறும் திணை - துறைக் குறிப்புகள் ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலையை அடி யொற்றிக் காணப்படுகின்றன. இஃது அந் நூலின் பழமைக்கு ஏலாத அமைப்பாகும் என்று நச்சினார்க்கினி யர் தம் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் எடுத்து காட்டியுள்னாா. அவர்தம் கருத்துரை வருமாறு:

“தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானுாற்றிற்குத் துறை கூறினரேனும் அகத்தியமும் தொல்காப்யியமுமே