பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாட்டும் தொகையும்

நடுகல்லில் இறந்த வீரனின் உருவமும், பெயரும் புகழும் எழுதப்படும்.

புலவர் நிலை

சங்ககாலப் புலவர்கள் வீரமும், அற உள்ள மும், தேர்ந்த சிறந்த தமிழ்ப் புலமையும் பெற்றுத் திகழ்ந்தனர் என்பதைப் புறநானுாற்றுப் பாடல்களால் நன்கு அறிய லாம். வறுமையிலும் தளராப் பெருவாழ்வு வாழ்ந்தனர் புலவர். அவர்கள் புரவலரை நாடி அவர்கள் கொடுத்த கொடையைக் கொண்டு வாழ்ந்தனர்; பலதொழில் செய்தவர்களும் புலவோராய் இருந்தனர்.

அரசர்கள் மதிமயங்கிக் குடிமக்களுக்குத் துன்பம் விளைவித்தபோதும், நீதிநெறி பிறழ்ந்தபோதும் அவர் களை இடித்துக்கூறித் திருத்தினர். அவர்களைக் கண்டு அஞ்சாமல் தமது நன்மையை எண்ணாமல் உலக நன்மை யையே எண்ணினார்கள். சங்கப் புலவோரது தமக்கென வாழா உயரிய வாழ்க்கை பெரிதும் பாராட்டத்தக்க தாகும்.

பெருந்தலைச் சாத்தனார் பாடிய பாடல் ஒன்று; கடிய நெடுவேட்டுண் என்றவன் பரிசில் நீட்டித்தான். அப்போது புலவர், --

முற்றிய திருவின் மூவர் ஆயினும்

பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே

-புறநானூறு : 205

என்று பாடினார். எவ்வளவு அதிகாரமும், பணமும், படையும், படைத்தவராயினும் அவர்களைக் கண்டு அஞ்சாத புலவர்கள், அவர்களது கொடுமையையும் பாடத் தவறவில்லை.

ஒளவையாரும் அதியனும் கொண்டிருந்த நட்பின் திறம் மிகவும் போற்றுதற்குரியது.நீண்டநாள் உயிர்வாழக்