பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாட்டும் தொகையும்

சமூகத்தில் புலவருக்கிருந்த நிலையை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

முரசு கட்டில் என்பது அரசசின்னம். அதை முரசு வைக்கத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தமாட்டார் கள். புனிதப்பொருளாக அது கருதப்பட்டது.

ஒருநாள் முரசை நீராட்டக்கொண்டு சென்றிருந்தனர். அப்போது. அங்குவந்த மோசிகீரனார் வழி நடந்த களைப்பால் அதில்படுத்து உறங்கிவிட்டார். எனவே, அவருக்கு மிகப்பெருந் தண்டனை கொடுத் திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் புலவருக்குக் கவரி வீசி னான் சேரமான் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறை, இதுவொன்றே அன்றைய புலவரின் நிலையை விளக்குகற்குச் சான்றாகும், மோசிகீரனார் பாடிய மற்றொரு பாடல்.

கெல்லும் உயிர்அன்றே நீரும் உயர்அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் யான் உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே!

-புறநானுாறு : 186 என்று மன்னர்களே நாட்டின் உயிர் என்று கூறியுள்ளார்.

பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பும் புல வர் அரசருக்கிணையாக எண்ணப்பட்ட நிலையை நன் குணர்த்தும்.

கபிலர் (புறம். 201, 202, 203) பாரியுடன் கொண்ட நட்பும், அதனால் அவன் இறந்தபின்னர் அவனுடைய மகளிரை அவர் பேணிய திறமும் சங்கப் புலவர்களின் மேன்மையைப் பறைசாற்றும் நிலையைக் காணலாம்.

கபிலரின் அற உள்ளமும், அஞ்சா நெஞ்சமும் அதில் புலனாகும்.