பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாட்டும் தொகையும்

பெருநீர் போகும் இரியல் மாக்கள் ஒருமரப் பாணியில் துரங்கியாங்குதொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழிஇ செவ்வி பார்க்கும் செழுநகர் முற்றத்து பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் இரும்புவிசைத்து எறிந்த கூடத்திண் இசை வெரீஇ, மாடத்து இறைஉறை புறவின் செங்காற் சேவல், இன்துயில் இரியும் பொன்துஞ்சு வியல்நகர்குணகடல் வரைப்பின் முந்நீர் காப்பண் பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு, முறைவேண்டுநர்க்கும், குறைவேண்டுநர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி, இடைத்தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி, கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து, உரும்பு இல் சுற்றமோடு-இருந்தோற் குறுகி, “பொறிவரிப் புகர்முகம் தாக்கிய வயமான் கொடுவரிக் குருளை கொளவேட் டாங்கு” புலவர் பூண்கடன் ஆற்றி, பகைவர் கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி அல்லது, வினை உடம் படினும், ஒன்றல் செல்லா உரவுவாட் தடக்கை, கொண்டி உண்டி, தொண்டையோர் மருக! மள்ளர் மள்ள! மறவர் மறவ! செல்வர் செல்வ! செருமேம்படுந!’

-பெரும்பாணாற்றுப்படை : 420 - 456

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பெரும்

பாணாற்றுப்படையின் இலக்கிய நயமான பகுதிகள் விரிந்து பரந்து விளங்குகின்றன.