பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாட்டும் தொகையும்

வில் திரும்பி வந்து தலைவியின் துயர் தீர்க்க வேண்டும் என்று தெய்வ அருள் வேண்டி நிற்கின்றனர். அதுபோது ஒரு நற்சொல் அவர்கள் செவியில் கேட்கின்றது. பாலுண் ணாமையும் தம் தாயாரைப்பிரிந்திருக்கும் துயரும் சேர்ந்து வருத்தம் மேலிடும் பசுங்கன்றுகளின் துன்பநிலையினைக் கண்ட ஆயர்குலப் பெண்ணொருத்தி அப்பசுங்கன்றினைப் பார்த்து ‘உங்கள் தாய்ப்பசுக்கள் விரைவில் திரும்யி வந்துவிடுவர். நீங்கள் உங்கள் துயரத்தைக் களைவீர் களாக’ என்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் நற் சொல்லினைக் கேட்டனர். அச் சொற்களைத் தெய்வச் சொற்களாக ஏற்ற முதுபெண்டிர் தலைவியிடம் வந்து இச் செய்தியினைக் கூறி விரைவில் தலைவன் வந்துவிடுவான்; எனவே, கலையொழிந்திருக்க’ என்று தேற்றுகின்றார்.

அருங்கடி மூதூர் மருங்கிற் போகி யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவல் அசைத் த கையள், ‘கைய கொடுங்கோற் கோவலர் பின்னின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர்’ என்போள் கன்னர் கன்மொழி கேட்டணம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது நீகின் பருவரல் எவ்வம் களைமா யோய்.

-முல்லைப் பாட்டு : 7 - 21

இத் தேறுதல் மொழியினைக் கேட்டும், பின் உளதாம் இல்வாழ்க்கைப் பயனை நினைந்தும் தலைவி ஆற்றியிருந்