பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நெடுநல்வாடை

188 அடிகளால் நக்கீரர் பாடிய பாட்டு இது. இப் பாட்டு அமைப்பில் முல்லைப்பாட்டுப் போல அமைதிருக் :றெது எளலாம். போர்மேற்கொண்ட தலைவனைப்பிரிந்து துயருறும் தலைவியின் நிலை, போர் மேற் கொண்டு தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவன் பாசறையின் கண் வதியும் காட்சி - ஆகிய இருவேறு காட்சிகளை இணைத்து நிற்பதாக இலங்குவது நெடுநல்வாடையாகும். போர் முடிந்து தலைவன் விரைவில் திரும்பவேண்டும் என்று வெற்றிக் கடவுளாம் கொற்றவையைப் பரவும் நிகழ்ச்சி மேற்கானும் இரண்டு நிலைகளையும் ஒன்றாக இணைக் ன்ெறது. இப்பாட்டு, புலவர் ஒருவரின் கூற்றாக அமையா மல் பெண்ணொருத்தியின் கூற்றாக அமைந்திருக்கக்

கான லாம்.

வாடைக்காற்று கொண்டுவரும் பெருமழையுடன் நெடுநல்வாடை தொடங்குகின்றது. சீறிச் சீறி அடிக்கும் வாடைக்காற்று எவ்வாறு நாடு நகரங்களையும் அங்கு வாழும் மக்களையும் வாட்டிவருத்துக்கின்றது என்று விரி வாகக் காட்டி நிற்கிறது. உயிரினங்களை நலிந்து மெலியச் செய்யும் வாடைக்காற்று, ஏற்கெனவே தலைவன் பிரிவால் மெலிவுற்றிருக்கும் தலைவியை மேலும் மெலியச் செய் Iெ) அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. தலைவன் வரு மளவும் அவன் சொல்லைத் தேறி ஆற்றியிருத்தல் தன் கடமையெனக் கருதி அவள் தன் விரல் நுனியால் தன் கண்