பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. குறிஞ்சிப் பாட்டு

261 அடிகளை உடைய ஆசிரியப் பாவால் அமைந் துள்ள குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டுள் எட்டாவது பாட்டாக அமைந்துள்ளது. காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகித் தலைவன் வரும் வழியிலுள்ள ஊறஞ்சும் காலத்துத் தலைவி பாங்கிக்கு அறத்தொடு நின்றாளாக, பாங்கி எளித்தல், ஏத்தல், வேட்கையுரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவியென்னும் ஆறும் கூறிச் செவிலிக்கு அறத்தொடு நின்றவழிக் கூறும் கூற்றாக ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற்பொருட்டுக் கபிலர் பாடியது’ என்று குறிஞ்சிப்பாட்டின் உள்ளிட்டினை நாம் அறிகின்றோம்.

இப்பாட்டு, பெருங்குறிஞ்சி’ என்றும் வழங்கப்படும். இக் குறிஞ்சிப்பாட்டில் பிற திணைகளுக்குரிய முதற் பொருளும் கருப்பொருளும் மயங்கிவந்தன என்றாலும், இந்நூல் நுவலும் உரிப்பொருட் சிறப்புப் பற்றி இப் பாட்டு குறிஞ்சிப் பாட்டு எனப் பெயர் பெற்றது.

இதனுள் தலைவி பாங்கொடு நிற்றற்குக் காரணமாகிய சிறை காவல், ‘காவல் கடுகினும் (240) முதலிய அடி களாலும், தலைவனுக்கு வரும் ஊறஞ்சுதல், ‘அளைச் செறி யுழுவையும்’ (252) முதலிய அடிகளாலும் விளங்கும் என்று தமிழ்த்தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தம்முடைய பத்துப்பாட்டு மூன்றாம் பதிப் பின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.