பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை 67

சினைச் சுறவின் கோடுகட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினான் மடல்தாழை மலர்மலைந்தும் பினர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும் புள் தலை இரும்பரதவர் பைந்தழை மாமகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது உவவு மடிந்து உண்டாடியும்

-பட்டினப்பாலை : 86 - 93

இனி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழும் வேளாளர் கள் பற்றிக் காண்போம். அவர்கள் கொலை செய்வதை வெறுத்தவர்கள்: களவு செய்தலைக் கனவிலும் கருதாதவர் கள். தேவர்களை வணங்கி அவர்களுக்கு வேள்வியின் மூலம் பலி கொடுப்பார்கள். நல்ல பசுக்களையும் எருது களையும் காத்தோம்புவர். வேள்வித்தகர்களைப் போற்று வார்கள். வந்த விருந்தினருக்கு வயிறார உணவு வழங்கு வார்கள் நல்லொழுக்கத்திலிருத்து நழுவ மாட்டார்கள். மேழிச் செல்வமே சிறந்தது எனப் போற்றுவார்கள்.

கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் கல்ஆனொடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை கொடுமேழி நசை உழவர்

-பட்டினப்பாலை : 199 -205

பட்டினப் பாலையின் இறுதிப் பகுதியில் சோழன் கரி காலன் காடுவெட்டி நாடாக்கின. செயலும் உறந்தையைப் புதுப்பித்த செய்தியும் உரைக்கப்படுகின்றன.