பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாட்டும் தொகையும்

பமாகக் கொள்ளாவிட்டாலுங்கூட, என் மாட்டுள்ள கண் ணோட்டதிற்காகவாவது இவளுடைய தோளிலே துயிலு வதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக; இவள்தான் என்பால் அடைக்கலமாக உடையளாயிருப் பாள் அல்லது வேறொரு துன்பமும் இல்லாதவளாவாள். இதனை நீ உணர்வாயாக’ என்று தோழி தலைவியிடம் கூறினாள்.

புதல்வன் ஈன்ற பூங்கண் மடங்தை முலைவாய் உறுக்கும் கைபோல் காந்தள் குலைவாய் தோயும் கொழுமடல் வாழை அம்மடற் பட்ட அருவித் தீநீர் செம்முக மந்தி ஆரும் நாட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் கஞ்சும் உண்பர் நனிநா கரிகர் அஞ்சில் ஒதிஎன் தோழி தோள் துயில் கெஞ்சின் இன்புறாய் ஆயினும் அதுே என்கண் ஒடி அளிமதி நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே

- நற்றிணை : 355

தேய்புரிப் பழங்கயிற்றினார் என்று பாவடித் தொட ராற் பெயர்பெற்ற புலவரொருவரின் பாடலில் இருதலைக் கொள்ளியாக இருக்கும் மனத்தின் போராட்ட நிலை நன்கு புலப்படுத்தப்பட்டிருக்கக் காணலாம். பொருள் வயிற் சென்ற தலைவன் தலைவியை நினைந்து ஆற்றா னாகி, ‘என் நெஞ்சமானது தலைவியின் பாற் செல்லுகிறது; அறிவானது பொருளை முடித்துப்போவாம்; அதற்குள் விரையாதே என்கின்றது. இவ்வாறு உள்ளத்திற்கும் அறி விற்கும் இடையே ஏற்பட்ட போராட்டத்தினால் என் உடம்பு, எதிர் எதிர் நின்ற யானைகள் இரண்டும் ஒன்றிற் கொன்று மாறுபாடாகக் கைப்பற்றி ஈர்த்த தேய்ந்த புரியையுடைய கயிறு அறுந்து ஒழிவது போல அழிய