பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 83

கொடுத்தனுப்பிய வளமான உணவைப் பற்றி நினைக்கா மல், ஒடும் நீரில் நுணுகிக் கிடக்கும் சிறு கருமணல் போல் விட்டுவிட்டு ஒவ்வொரு பொழுது உண்ணும் சிறு வன்மை உடையவளாகி விட்டாள்’ என்று தாய் ஒருத்தி குறிப்பிடுகிறாள்.

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொன்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூங்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர் முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிகரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரிமெலிந்து ஒழியப் பங்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள் கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தங்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே.

-நற்றிணை: 1.10 போதனார் பாடிய மேற்கணும் பாடலில் இல்லற வாழ்வு சிறக்க மங்கையர் மேற்கொள்ள வேண்டிய இனிய வாழ்க்கைத்தத்துவம் இனிதுறப் புலப்படுத்தப் பட்டிருக்கக் அதிT T )ெ TLD .

இவ்வாறு நற்றிணையில் மிகப்பல பாடல்கள் நயம் மிக்கனவாய் அமைந்திருப்பதைக் காணலாம்.