பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

பாப்பா முதல் பாட்டி வரை

சுய முடிவு எடுக்க அனுமதியுங்கள் : சிறு சிறு விஷயங்களில் கூட குழந்தைகளை சுய முடிவு எடுக்க விடாமல், பெற்றோர் குறுக்கிடுவது நல்லது அல்ல. உதாரணமாக புதிய ஆடை வாங்கிக் கொடுக்க கடைக்கு அழைத்துச் செல்லும் போது குழந்தை தான் விரும்பும் கலர் துணியை எடுத்துக் கொள்ளப் பெற்றோர் அனுமதிக்க வேண்டும். தங்கள் விருப்பத்தைக் குழந்தையின் மீது திணிப்பது சரியல்ல.

குழந்தைக்குப் பிரச்சினை ஏற்படும் நிலை : பள்ளியில் ஆசிரியர் திட்டிவிட்டார் என்று குழந்தை வந்து சொன்னால், பெற்றோர் உடனே, பதட்டம் அடையத் தேவையில்லை. எதற்காக ஆசிரியர் திட்டினார் என்பதைத் தெரிந்து கொண்டு, குழந்தையிடமே பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய வழியைக் கேட்க வேண்டும். குழந்தையின் முடிவு சரியாக இருக்குமானால், உடனே பாராட்டத் தவறக்கூடாது. இவ்வாறு செய்தால், எந்தவொரு விஷயத்திலும், சுயமாக நல்லதொரு முடிவு எடுக்கும் திறன் குழந்தைக்கு வளர்ந்துகொண்டே வந்து, எதிர்காலத்தில் நன்மை தரும்.

யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லதா? : “எங்க வீட்டுப்பிள்ளைங்க யாரிடமும் பேச மாட்டார்கள்; இவர்கள் உண்டு - அவர்கள் வேலை உண்டு என இருப்பார்கள் ” எனப் பல பெற்றாேர்கள், மார்தட்டிக் கொள்வதுண்டு. இது தவறான அணுகுமுறை. மாறி வரும் சமுதாயச் சூழ்நிலையில், எல்லோரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுவது அவசியம். அப்போது தான், ஏட்டுக் கல்வியோடு, வாழ்க்கைக் கல்வியையும் தெரிந்து கொள்ள முடியும். யாரிடமும் பேசாமல், வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக வளரும் குழந்தைகளால், வெளி உலகத்தை ஜெயிக்க முடியாது. ஒரு கடைக்குப் போய், ஒரு