பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தைக்கு ஹெர்னியா வருமா? : விரைப்பையில் திரவம் நிரம்பியிருந்தால், பிறந்த குழந்தையின் விரைப்பை ஒரு பக்கம் வீங்கும். அல்லது குடலின் ஒரு பகுதி விரைப் பைக்குள் இறங்கி விடுவதால், குடல் இறக்கம் (ஹெர்னியா) ஏற்படுகிறது.

குழந்தை இருமும் போது, அழும்போது, விரை வீக்கம் பெரிதாகுமானால், குழந்தைக்குக் குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு அறுவை சிகிச்சையே தீர்வு.

காரணம் : கருவிலேயே விரைப்பைக்கும் வயிற்றுக்கும் இடையே, குழாய் போன்ற தொடர்பு இருக்கும். குழந்தை பிறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர், இந்தக் குழாய் மறைந்து விடும். சில குழந்தைகளுக்கு இது மறையாமல் இருப்பதால் தான் குடல் இறக்கப் பிரச்சினை ஏற்படுகிறது.

குடல் இறக்கம் காரணமாக, வயிற்றில் வலி இருந்தால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குடல் இறங்குவதற்குப் பதிலாக, விரைப்பை நீர் காரணமாக வீக்கம் இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் குழாய்த் தொடர்பைத் துண்டித்து நீரை வெளியேற்றி விடலாம். பெரியவர்களுக்கு வருவது போன்ற ‘ஃபேலேரியல் ஹைட்ரோசீல்’ (Filarial Hydrocele) நோய் குழந்தைகளுக்கு வருவதில்லை.

சிறுநீர் கழிக்கும் துவாரம் சிறியதாகவே இருத்தல் : சிறுநீர் வெளியேறும் துவாரத்தைத் தோல் அதிக அளவு மூடியிருத்தல் காரணமாக ‘ஃபேமோஸிஸ்’ (Phimosis) எனப்படும் இப் பிரச்சினை ஏற்படுகிறது. உள்ளாடையிலேயே குழந்தை சிறுநீர் கழித்து, ஆடை மாற்றப்படாததால் அந்த ஈரம் சிறுநீர்த் துவாரத்தின் மீது பட்டுக்