பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

15

கவும், சில நோய்கள் விரைவில் குழந்தைகளைப் பீடித்துக் கொள்கின்றன.

நோய்கள்: குழந்தை நோய்கள் பலவகைப்பட்டவை. சில நோய்கள், குழந்தை பிறப்பதற்கு முந்தியே அடிகோலத் துவங்குகின்றன. இவைகளைப் பாராம்பரிய நோய்கள் எனக் கூறுவார்கள். பெற்றோர்களிடமிருந்து காக்கை வலிப்பு (Epilepsy), மூளைமந்தம் போன்ற நோய்களும், மூளி உதடு (Hare lip) போன்ற பிறவிக் கோளாறுகளும் வரக்கூடும். தமிழ் நாட்டில் காணப்படும் ஈரல் குலைக்கட்டி எனப்படும் நோயும் ஒரு வகையில் பாரம்பரியமாக வரும் நோயெனக் கருதப்படுகின்றது.

இவ்வாறு குழந்தைகளுக்கு வரும் நோய்களைத் தடுப்பது எளிது. மணம் செய்து கொள்கின்றவர்கள், காக்கை வலிப்பு, பைத்தியம், மூளைமந்தம் போன்ற நோய்கள் இல்லாதிருக்கின்ற குடும்பமா எனக் கவனித்து மணம் புரிந்து கொள்வது நலம். க்ஷயம், குஷ்டம் இவைகள் உள்ளவர்கள் நல்ல திறமையான சிகிச்சையினால் முற்றும் குணமடைந்து விட்டனர் எனத் தெரிந்த பின்பு தான் மணந்து கொள்ள வேண்டும்.

கருப்பையில் இருக்கையில் குழந்தைகளுக்குச் சில நோய்கள் ஏற்படுகின்றன. தாயின் இரத்தம் கிரந்திப் புண் நோயினால் கெட்டிருந்தாலும், தாய் தகுந்த சுகாதாரப் பாதுகாப்புக்களைக் கையாளவிட்டாலும், கருப்ப காலத்தில் தாய் ஊட்டம் மிகுந்த உணவு உட்கொள்ளா விட்டாலும், குழந்தைகளுக்குச் சில நோய்கள் ஏற்படுகின்றன. இவைகளைத் தடுப்பதும் எளிது. உடல் நிலையை அப்போதைக்கப்போது ஆராய்ந்து, இரத்தம் கெட்டிருந்தால், உடனடியாகத் தகுந்த சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். கருப்ப காலத்தில் மருத்துவர் ஆலோசனையைக் கேட்டு, உடல் நலப் பாதுகாப்புகளை ஆராய்ந்து,