பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

பாப்பா முதல் பாட்டி வரை

படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் காதுக் கோளாறு : பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது, சரிவான நிலையில், அதாவது குழந்தையின் தலையை உயர்த்தி, காலைத் தாழ்த்திக் கொடுக்க வேண்டும். சமமாகப் படுத்த நிலையில் குழந்தை பால் குடிக்கும்போது, காது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதைவிட முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தைக்குச் செவித்திறன் சரியாக உள்ளதா எனப் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். இதைக் கண்டறியும் வசதி மிகக் குறைவான மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. குறைப் பிரசவம் ஆன குழந்தைகள், குழந்தை தாயின் வயிற்றில் இருந்தபோது தாய்க்கு ஏதேனும் வியாதி ஏற்பட்டிருத்தல், போன்ற பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே, டாக்டர்கள் செவித் திறனைப் பரிசோதிக்கின்றனர்.

ஆனால், சுகப் பிரசவம் ஆன குழந்தைக்கு, இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. ஆனாலும், காது கேளாத குறை மட்டும், இறந்துபிறக்கும் குழந்தைகளும் உள்ளன. கை தட்டும் சத்தம் கேட்டு குழந்தை திரும்பிப் பார்ப்பது. டம்ளர் கீழே விழுவது போன்ற, சத்தத்துக்குக் கண்ணை மூடுவது, கை, கால்களை அசைத்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவது (State response) மூலம், குழந்தைக்குக் காது கேட்கிறதா என எளிதாக அறிந்து கொள்ளலாம்.

சந்தேகம் இருந்தால், ஒரு வயது ஆகும் முன்பு, செவித்திறன் சரியாக உள்ளதா என அறிந்துகொள்ளச் சோதனை செய்யலாம்.

பேச்சுத் திறன் போகும் அபாயம் : காது கேளாத குழந்தைகளைக் கண்டறியத் தவறினால், எதிர்காலத்தில்