பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

175

(Acidity) போன்ற காரணங்களால், தொண்டையில் நோய்கள் உண்டாகின்றன. புகை பிடித்தலுக்கும் மேலாகப் பாதிப்பது, வயிற்றில் அமிலத் தன்மை,அதன் காரணமாக உண்டாகும் புளி ஏப்பம், மற்றும் நெஞ்சு எரிச்சல் எனத் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருத்தல், தேவையான ஓய்வு இல்லாதது. மன அழுத்தம். மது வகைகள் அதிகம் உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால், வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுகிறது. மேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள், உணவு, வாழ்க்கை முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலம் உணவுக் குழாய் மற்றும் தொண்டைப் பாகத்தில் பிற்காலத்தில் உண்டாகும் கொடிய வியாதிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

தொண்டையில் உண்டாகும் வியாதிகள், கிருமிகளால் உண்டாகும்போது, தொண்டையில் வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளின் ஆரம்ப நிலையிலேயே வந்துவிடுகின்றன. ஆனால், தொண்டையில் உண்டாகும் புற்றுநோய் போன்ற வியாதிகளால், அதிகமான வலி உண்டாவதில்லை. மாறாக, குரலில் மாற்றம், உணவு விழுங்கும் போது, ஏதோ ஒரு காதில் வலி தொடர்ந்து எந்தக் காரணமும் இல்லாமல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தொண்டைப் புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஆரம்ப நிலை தொண்டைப் புற்று நோய்களைக் கண்டறிய ‘Video laryngoscope’ எனும் கருவி மிக உதவியாக உள்ளது. காண்பதற்குச் சிரமமான தொண்டைப் பாகங்களை, இக் கருவியின் மூலம், பல மடங்குகள் பெரிதாக்கி,