பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

பாப்பா முதல் பாட்டி வரை

செய்துவிடலாம். காரை தீவிரமாக உள்ள நிலையில், அவற்றை அகற்றி, அசையும் பல்லைக் கம்பி கட்டி அசையாமல் செய்து விடலாம்.

பயோரியா நோய்க்கு, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்யாவிட்டால், ஈறுப் பாகங்களில் சீழ் கட்டி, சீழில் உள்ள நச்சுக் கிருமிகள், ரத்தம் மூலம், உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவும்.

வாய் துர்நாற்றம் : வாயிலே ஏற்படக் கூடிய தொற்று நோய்களே, வாய் துர்நாற்றத்துக்குக் காரணம். சரிவர பற்களைத் துலக்கிக் கொப்பளிக்காமல் இருப்பவர்களுக்கு, உணவுப் பொருள்கள், அழுகி துர்நாற்றம் வீசும். தொண்டை நோய், இரைப்பை நோய், சிறுகுடல் நோய், நுரையீரல் நோய் காரணமாகவும், துர்நாற்றம் வீசும். நோய்க்கான காரணத்தை அறிந்து தொடக்கத்திலேயே சிகிச்சை பெறுவதே நல்லது. துர்நாற்றம் வீசும் பிரச்சினை உள்ளவர்கள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை, பற்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

வேண்டாம் புகை : புகை பிடித்தல், புகையிலை போடுதல், பொடி வைத்தல், பான்மசாலா போடுதல் காரணமாகப் பற்களில் கறை படிகிறது.மேலும் வாயின் செம்படலத்தில் ரணம் ஏற்படுவது உண்டு. மேலும் வாயில் வெண் படலங்கள் தோன்றி, அந்த வெண் படைபெரிதாகி, வெடித்துப் புற்றுநோயாக மாறும். அதுவே வாய்ப் புற்றுநோய் வரக் காரணம்.

தீய பழக்கங்களால், பல் தேய்ந்து சிதைவு ஏற்படுகிறது. தேய்ந்த பல்லை பாலீஷ் போட்டுச்சரிசெய்ய முடியும்.

தெற்றுப் பற்கள் : விரல் சூப்புதல், பென்சில் கடித்தல், வாய் வழியாக மூச்சு விடுதல், ஆகிய குழந்தைப் பருவப்