பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தைகள், நோய்களுக்கு இலக்காதலைக் காட்டிலும், தீ வண்டிகளினால் ஏற்படும் விபத்துக்களுக்கு அதிகம் இலக்காகின்றனர்.

பள்ளிப் பருவமான, ஐந்திலிருந்து பதினான்கு வயது வரை உள்ள குழந்கைளை, நோய்களும், விபத்துக்களும் சரி சமமான அளவில் பாதிக்கின்றன. இந்த வயதில் முக்கியமாக முடக்குக் காய்ச்சல் (Dengue) குழந்தைகளை அதிகம் பீடிக்கின்றது, பெனிசிலின், சல்பானிலமைடு போன்ற புதிய நோய் தடுக்கும் மருந்துகள் பல இருக்கும் இக் காலத்தில், இப் பருவத்தில், நிமோனியா, டைபாய்டு முதலிய நோய்களினால், குழந்தைகள் இறத்தல் மிகவும் குறைந்து வருகின்றது. இப் பருவத்தில் குடல்வாலழற்சி ஏற்படலாம்.

கண்வலி : தாயின் பிரசவ பாகத்தில் வெட்டை நோய் ஏற்பட்டிருந்தால், அதன் வழியே வெளியேறும் குழந்தையின் கண்களை, இந் நோய் பற்றுகிறது. இதைத் தவிர, ஸ்ட்ரெப்டோகாக்கஸ், ஸ்டெபிலோகாக்கஸ், பாசிலஸ் கோலை, தொண்டையடைப்பான் முதலிய நோய்க் கிருமிகளும் பிறந்த குழந்தையின் கண்களைத் தாக்கிக் கண்வலி உண்டாக்கக்கூடும்.

நோய்குறி : பிறந்த இருபத்து நான்கு அல்லது நாற்பத்தெட்டு மணிநேரம் சென்றபின், குழந்தையின் இமைகள் இலேசாகச் சிவந்து, தடித்துக் காணப்படும்; நீர் கசியும். இமைகளின் வீக்கம் அதிகரித்ததும், கண்ணின் ஒரத்தில் புளிச்சை கட்டிக் கொண்டு இமைகளைத் திறக்க முடியாது ஒட்டிக் கொள்ளச் செய்யும். இந் நோய் முதலில் ஒரு கண்ணில் தொடங்கி, மற்றைய கண்ணிற்கும் பரவிவிடும்.

சிகிச்சை : கவனிக்காது அசட்டை செய்தால், இந்நோய், பார்வையைப் பாதித்து விடும். இதை வராது