பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

பாப்பா முதல் பாட்டி வரை

ரத்தக் காயம் இருந்தால் பவுடர் கூடாது : இத்தகைய நோயாளிக்கு, உடனடியாக ரத்தம் செலுத்துவதால், எலும்பில் சீழ் பிடிக்காமல் பாதுகாக்கவும், விரைவில் எலும்பு கூடவும் ஏதுவாகும். ரத்தக் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவில், எந்த விதமான எண்ணெய், பவுடர், ஆகிய எதை வைத்தும் கட்டுப்போடக் கூடாது. தேவையற்ற பொருள்களை ரத்தக் காயத்தில் வைப்பதால், கிருமிகள் உடலினுள் சென்று, எலும்பிலும், தசையிலும் சீழ் பிடிக்க நேரலாம். ரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயத்தில், சுத்தமான தண்ணீரில் அலசிய துணியை வைத்து, கட்டுக்கட்டி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

முதுகெலும்பு முறிவு : எலும்பு முறிவில் மிகவும் கொடுமையானது, முதுகெலும்பு முறிவு தான். முதுகெலும்புக்குள் இருக்கும் தண்டுவடம் (Spinal cord) அடிபட்டு, கால்கள் இரண்டும் செயலிழந்து போகும். இத்தகைய முதுகெலும்பு முறிவினால் ஏற்பட்ட தண்டுவடச் சிதைவுக்கு, வெகு விரைவில் முதுகெலும்பை நேராகப் பொருத்தி, ஸ்குரூ - பிளேட் பொருத்தி, நோயாளியை நடமாட வைக்கலாம்.

இவ்வாறு முதுகெலும்பு உடைந்து கால்கள் செயலிழந்து போன நோயாளிக்கு மறுவாழ்வு கொடுக்க அறுவை சிகிச்சையும் மறுவாழ்வுப் பயிற்சியும் (Rehabitation) மிக முக்கியம். இத்தகைய நோயினால், சிறுநீர், மலம் கழிப்பது செயலற்றுப் போகும்.

ஊனமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம், உடல் ஊனத்தைச் சரி செய்து அவர்களின் தோற்றத்தை அழகுபடுத்தலாம். உடல் ஊனத்துடன் பிறந்த குழந்தைகளுக்கு, ஒரு வயது ஆவதற்கு முன்பே, அறுவை சிகிச்சையை ஆரம்பித்து விடலாம். கணுக்கால் வளைவு (Glub foot) முழங்கால் வளைவு ஆகியவற்றை அறுவை சிகிச்சை முலம் குணப்படுத்தலாம்.