பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

39

இலேசான சூடாகத் தென்படும். கண்களிலும் மூக்கிலும் நீர் கசிந்து கொண்டிருக்கும். பசி கெட்டு விடும். பெரியவர்களைப் போல் மூக்கில் கசியும் நீரை அப்புறப்படுத்த முடியாததினால், தேங்கியுள்ள சளி நீர் மூச்சைத் திணறச் செய்யும். மேலும், குழந்தையின் மூக்குத் துவாரம், பெரியவர்களுக்கு இருப்பதைவிடச் சிறியதாகையினால், உள்ளேயுள்ள தோல் உப்பிக் கொண்டு, துவாரம் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது.

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தை, காலையில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும். நடுப்பகலின் போது சோர்ந்து காணப்படும். சாயங்காலம் மூக்கைப் கைகளால் தேய்த்துக் கொண்டு, பிடிவாதமும் அழுகையுமாக மாறிவிடும். காய்ச்சல் 102 : பா. அல்லது 103 பா. வரை காணப்படும். கண்கள் சிவந்து, இமைகள் இடுங்கும். மூக்கிலும், கண்களிலும் நீர் சுரந்து, மூச்சுத் திணறும். சில சமயம் குழந்தைக்குக் சளி பிடிப்பது வாந்தியுடன் ஆரம்பமாவதும் உண்டு. காய்ச்சலில்லாமல் வெறும் சளிமட்டுமே காணலாம்.

சளிப்பினால் ஏற்படும் தொந்தரவுகள் : சளிப்பு அபாயரமான நோயாக இல்லாவிடினும், அதைத் தொடர்ந்து வேறு நோய்கள் தொடங்கக் கூடும். மூக்கின் உட்புறத் தோலைப் பாதிக்கும் நச்சுக்கிருமிகள் காது, தொண்டை, சுவாசக் குழல்கள், மூக்கடித் துவாரங்கள், கழுத்துச் சுரப்பிகள் முதலியவற்றிற்கும் பரவிப் பல்வேறு நோய்களை உண்டு பண்ணலாம். காதில் சீழ் வடிதல், தொண்டை ரணம், மூளைச் சன்னி, நிமோனியா, இருமல் போன்ற நோய்கள் சளி காரணமாக உண்டாகலாம்.

சிகிச்சை : குழந்தைக்குச் சளி ஏற்படாது தடுப்பது தான் தகுந்த சிகிச்சையாகும். கூட்டம் நிறைந்த நாடக, சினிமாக் கொட்டகைகளுக்குள் குழந்தையை