பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

பாப்பா முதல் பாட்டி வரை

உறுதியடைந்து, நடக்கத் துவங்கும். இளம்பிள்ளை வாதத்தினால் நடக்க முடியாது போகும் குழந்தைகளுக்கு, உரிய காலத்தில் தனிப்பட்ட சிகிச்சை அளித்தால், ஒரளவு அவைகளுக்கு நடக்கும் திறமையை ஏற்படுத்தலாம்.

பேச முடியாமை : மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு அநேகமாகப் பேசும் திறமை நன்கு ஏற்பட்டு விடுவதுண்டு. சில குழந்தைகள் வயது மூன்று ஆகியும், சிறிதும் பேச முயல்வதில்லை. காரணம் : 1. பிறவியிலே செவிட்டு, ஊமை. 2. மூளை மந்தம். 3. மூக்கடிச்சதை; தொண்டை சதை இவைகள் வீங்கி, ரணமாக இருத்தல். 4. நாக்குக் கட்டு (tongue tie)

சிகிச்சை : காரணத்தைக் கவனித்து ஏற்ற சிகிச்சை செய்வது நலம்.

அலெர்ஜி : இது நுரையீரல், மூக்கின் உட்புறத்தோல், இவைகளை பாதித்தால், காசம், வற்றாத சளி இவைகள் ஏற்படுகின்றன. தோலின் மீது காணப்படும் பொழுது, எக்சிமா என்னும் சிவந்த தடிப்புக்கள் காணப்படும். குடலைப் பாதித்தால், வாந்தியும் பேதியுமாக வெளிப்படுகின்றது. முட்டிகளைப் பாதிக்கையில் முட்டியில் வீக்கம் ஏற்படும்.

குழந்தைகளுக்குப் பயன்படும் கம்பளிச் சட்டைகள் சில சமயம், சில குழந்தைகளுக்கு எக்சிமா எனும் சரும நோய் உண்டுபண்ணுகின்றது. இதைத் தவிர, உட்கொள்ளும் உணவு சில சந்தர்ப்பங்களில் அலெர்ஜியை உண்டுபண்ணுவதுண்டு. முட்டை, பால், ஆரஞ்சுப் பழங்கள், மீன், கோழி இறைச்சி, சில தானியங்கள், வெண்ணெய் முதலியவை, குழந்தைகளுக்குக் கொள்ளாமல், அலெர்ஜி நோயை உண்டு பண்ணுவதுண்டு. அபூர்வமாகச் சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒத்துக்கொள்வதில்லை.