பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பாப்பா முதல் பாட்டி வரை

மேற்பட்ட குழந்தையிடம் கணைநோய் கர்ணப் படுகையில், இந்த இசிவு நோயையும் வரக் காணலாம். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை, பேதியில் கஷ்டப்படுகையில் இத்தகைய இசிவும் தோன்றலாம். ஆனால் இந்த இசிவுற்கு முக்கியக் காரணம், இரத்திலுள்ள கால்சிய அளவிற்கு வெகு குறைவாக இருப்பது. இரத்தத்தில் கால்சியம் கறைந்து போவதற்குக் காரணம் கேடயச் சுரப்பித்துணை (Prathyroikd) எனும் சுரப்பி ஒழுங்கீனமாக வேலை செய்வதுதான். இந் நோய் உயிருக்குக் கெடுதி செய்யாது, எனினும் மிகவும் வலி கொடுக்கும் நோய்.

சிகிச்சை : கணை நோய்க்கு உகந்த சிகிச்சை செய்தல், வேண்டும். கால்சியம் லாக்டேட்டு மருந்து, தினசரி 15 லிருந்து 30 கிரெயின் கொடுப்பதும் நலமாகும். அத்துடன் மீன் எண்ணெய் தினசரி ஒரு தேக்கரண்டி அளவு, காலையிலும் மாலையிலும் கொடுக்க வேண்டும். இசிவு நோயைக் குறைக்க, புரோமைடுகள், குளோரால் போன்ற மருந்துகள், அப்போதைக்கப்போது கொடுப்பது நலம்.

தலை ஆட்டம்: தலையாட்டும் பொம்மை போன்று, குழந்தை மேலும் கீழும் அல்லது இப்புறமும் அப்புறமுமாகத் தலையசைத்துக் கொண்டிருப்பது, ஒரு வித நரம்புக் கோளாறாகும். இத்துடன் சில சமயம், கண்களின் விழிகளும் கடியாரப் பெண்டுலம் போல் ஆடுவதும் உண்டு.

இது சுமார் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும். குழந்தை, எதையாவது ஒரு பொருளை ஊன்றிப் பார்க்க முயன்றவுடன், தலை கடிகாரப் பெண்டுலம் போல் ஆடத் துவங்கிவிடும். நரம்பு மண்டலம் ஒழுங்காக இயங்கும் கச்தி பெறாததினால், ஏற்படும் இது, விரைவில் தானே குணமாகிவிடும். ஆகவே சிகிச்சை தேவையில்லை.