பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பாப்பா முதல் பாட்டி வரை

மூர்ச்சை : பள்ளிப் பவருத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தமான நோய்.

நோய்க்குறி : விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை, திடீரென்று முகம் வெளுத்து, வெறித்துப் பார்த்த நிலையில் திடீரெனக் கீழ விழுந்து மூர்ச்சை அடைந்து விடும். நினைவு பூரணமாக மங்கி விடுவதில்லை. சில சமயம் வாந்தி, குமட்டல் இவைகளும் காணப்படும். உணர்வு பாதி தவறிய இந்நிலை, சில விநாடிகளிருந்து அரைமணி நேரம் வரையும் நீடித்திருக்கும்.

காரணம் : இயல்பாகவே பயந்த குணம் கொண்ட மனநிலை, அசீரணம், பொதுவான ஆரோக்கிய நலிவு.

சிகிச்சை : நரம்புகளைத் தூண்டிவிடும் ஸ்ட்ரிக்னீன் கலந்த டானிக்குகள், நல்ல ஓய்வு, இடமாற்றம், ஊட்டமான உணவு.

இழுப்பு (Convulsion): இரு நரம்புமண்டலம் பற்றிய நோய்களில் மிகவும் கடுமையான வகையைச் சேர்ந்தது.

பார்க்க : இழுப்பு.

ஹிஸ்டிரியா: குழந்தைகளுக்கு ஹிஸ்டிரியா வருவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. 1. நோய் ஏற்பட அதிக காரணமாக இருந்த சூழ்நிலை. 2. நோயைத் தூண்டி உற்பத்தி செய்பவை. முதலாவதாக, மிகவும் மென்மையான தன்மையும் உணர்ச்சிகள் தாங்க முடியாத மெலிந்த நிலையுமுடைய பெற்றோர்களுக்குக் பிறக்கும் குழந்தைகள் ஹிஸ்டிரியா நோய்க்கு இலக்காகின்றன. இந் நோயைத் தூண்டி வரச் செய்யக் காரணமாக அமைவன சிறு காயம் அல்லது பயம் முதலியவைகள் ஆகும்.

குழந்தைகளிடம் ஹிஸ்டீரியா பலவகைத் தோற்றத்தில் காணப்படும். கைகால்களை நீட்டி மடிக்க