பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

93

முதல் குழந்தை சிசேரியன் என்றால், இரண்டாவது குழந்தயுைம் சிசேரியனா? : சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் தான் பிறக்கும் என்ற விதி ஏதும் இல்லை. நஞ்சு இடம் மாறியிருத்தல், குழந்தை மாறிக்கிடத்தல், உயர் ரத்த அழுத்தம், குழந்தையின் கழுத்தை நஞ்சுக் கொடி சுற்றிக்கொள்ளுதல், ஆகிய காரணங்களால், சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்திருந்தால், மீண்டும் இதே காரணங்கள் ஏற்படாமல் போகும் நிலையில் சிசேரியன் அவசியம் இல்லை. ஆனால், தாய்க்குக் குறுகிய கூபகம். கர்ப்பப் பையில் குழந்தையின் எடை அதிகரித்து, கூபகத்தோடு தலை பொருந்தாமல் போகுதல் போன்ற நிரந்தரக் காரணங்கள் இருக்குமானால், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே இரண்டாவது குழந்தை பிறக்கும்.

முதல் குழந்தை சிசேரியனாக இருந்தால்: சிசேரியன் மூலம் முதல் குழந்தை பிறந்திருந்தால், இரண்டாவது முறை கர்ப்பம் தரித்தது முதலே, கர்ப்பிணிகள் உஷாராக இருப்பது அவசியம். அனைத்துச் சோதனை வசதிகளும் கொண்ட மகப்பேறு மருத்தவமனையில், முன் பேற்றுக்கால கவனிப்பைச் செய்துகொள்ளவேண்டும். ஏனெனில், பிரசவ நேரத்தில் எற்படும் திடீர் விளைவுகளைச் சமாளிக்க, அனைத்து வசதிளும் கொண்ட மருத்துவமனை அவசியம்.

சுகப் பிரசவத்துக்கு வழி உண்டு : சிசேரியன் அறுவை சிகிச்சைக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போவதால், சுகப் பிரசவத்துக்கே வாய்ப்பில்லை என நினைக்க வேண்டாம். சிசேரியன் செய்தவதற்கான கட்டாயச் சூழ்நிலைகள் தான் பட்டியலிடப்பட்டுள்ளன.