பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்றும் "திருவைப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் பரிந்து" என்றும் "கூடித் தொழில் செய், கைத்தொழில் போற்று. பணத்தினைப் பெருக்கு" என்றும், 'அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடு வீரே' என்றெல்லாம் பாரதி தொழிலைப் பற்றியும், தொழிலின் மேன்மையைப் பற்றியும், செல்வப் பெருக்கத்தைப் பற்றியும் நுகர்வைப் பற்றியும் அழுத்தம் கொடுத்துத் தன்னுடைய பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார். இவற்றைப் பற்றியெல்லாம் பாரதி தனக்காகக் கூறவில்லை, நாட்டுக்காகவும் சமுதாய மேன்மைக்காகவுமே பாடுகிறார். உலக நன்மையைக் கருதி எல்லோரும் தொழில் செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதை வலியுறுத்திக் கூறுவதை பாரதி தனது பகவத் கீதை மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் தெளிவாக வலியுறுத்திக் கூறுகிறார். இந்து தர்மமே, வழிபாட்டு சுதந்திரம் கொண்டதாகவும், சமய சமரசத்தைக் கொண்டதாகவும், எம்மதமும் சம்மதம் என்னும் பரந்த நெறிமுறையை பண்பாட்டுத்தளமாகக் கொண்டது என்பதையும் உலகியல் வாழ்க்கையைப் பற்றியும் அதிகமாக வற்புறுத்துவது என்பதையும் காண முடிகிறது. மிகப் பெரும்பாலான இந்திய தத்துவ ஞானிகளும் ஆன்மீகத்தோடு இணைந்த உலக வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை, இயற்கை, இயற்கையுடன் இணைந்து நிற்கும் மனித வாழ்க்கை, பஞ்ச பூதங்களின் செயல்பாடு, அவைகளின் பயன்பாடு, தொழில், தொழில் பயன், பொருளியல், அரசியலோடு இணைந்த பொருளியல், அறவழியில் அனைத்து செயல்பாடுகளும் என இவற்றையே அதிகமாக வலியுறுத்திக் கூறியுள்ளனர். பாரத நாட்டின் ஆதார நூல்களில் மனு நீதி தர்மமும், கெளடில்யரின் அர்த்த சாஸ்திரமும், வத்சாயனருடைய காம சூத்திரமும், அதே போல பாரதத்தின் அடிப்படையான ஆதி நூல்களான வேதங்கள், உபநிடதங்கள், பிரம சூத்திரம், பகவத்கீதை மற்றும் சுக்கிர நீதி, விதுர நீதி, வியாச நீதி, மற்றும் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், பாகவதம், மற்றும் இதர புராணங்கள் மூலம் எடுத்துரைக்கப்படும் அரச நீதி ஆகியவையெல்லாம் வாழ்க்கை நெறிமுறைகளை இணைத்தே வலியுறுத்திக் கூறுகின்றன. இவைகளில் பொது நீதி, தனி மனிதன் மற்றும் சமுதாயக் கடமைகள், பொருளியல், உற்பத்தி முறை, வினியோக முறை, குடும்ப வாழ்க்கை முறை ஆகியவை எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. இவைகளை நன்கு கற்றுணர்ந்து, அக்கருத்துகளில் வேர் ஊன்றி நின்று அவைகளில் காலம் கடந்து போனவைகளையும் தவறான முறையில் திரித்துக் கூறப்பட்டவைகளையும் உதறி எறிந்து விட்டுப் புது நெறியை பாரதி வகுத்துக் கூறியுள்ளார். பாரதி தனது கண்ணன் பாட்டுகளில் 'கண்ணன் என் தாய்' என்னும் தலைப்பிலான பாடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "சாத்திரம் கோடி வைத்தாள் - அவை தம்மில் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் மீத்திடும் பொழுதினிலே - நான் வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர் தம் கூத்துக்களும் மூத்தவர் பொய் நடையும் - இள மூடர் தம் கவலையும் அவள் புனைந்தாள்' என்றும், கண்ணன் என் தந்தை என்னும் தலைப்பில் "வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த வேதங்கள் மனிதர் தம் மொழியில் இல்லை வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறுங்கதைத்திரளில் அவ்வேதமில்லை வேதங்கள் என்ற வற்றுள்ளே - அவன் வேதத்தில் சில சில கலந்த துண்டு வேதங்களன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தையெல்லாம்