பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பா டுத் தளத்தில் பாரதி =}}|- சீனிவாசன் என்று பாரதி விநாயகரை வேண்டுகிறார். இன்னும், 'மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள், யாவும் என் வினையில் இடும்பை தீர்ந்தே இன்ப முற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும்" என்றும், 'பூ மண்டலத்தில் அன்பும் பொறையும் விளங்குக துன்பமும் மிடிமையும் நோவும் சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ்க என்பேன்" என்றும், விநாயகர் நான்மணி மாலையில் குறிப்பிடுகிறார். மனித சமுதாயம் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நல்வாழ்வு பெற வேண்டும். இயற்கை சக்திகள் அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டும். மனிதனுக்கும், இதர உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் இடையில் நல்லுறவு அமைய வேண்டும். என்பது இந்திய சாத்திரங்களின் பொதுக் கொள்கையாகும். இது இந்திய சாத்திரங்களுக்கே உரிய தனித்தன்மையாகும். இதை பாரதியும் தனது கவிதைகளில் தெளிவாகப் பல இடங்களிலும் பேசுவதைக் காணலாம். புதுவினை காட்டவும், மதியினை வளர்க்கவும், இச்சை, கிரியை, ஞானம் ஆகியவற்றை ஆக்கவும், வளர்க்கவும் விநாயகரைப் பாரதி வேண்டுகிறார். சமுதாய வளர்ச்சிக்கு இவை ஆதாரமாகும். இச்சை என்றால் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கும் ஓர் எண்ணம். ஓர் ஆசை. ஆவல், ஒரு தூண்டுதல், ஒரு விருப்பம் ஏற்பட வேண்டும். அதை அடுத்து அதைத் தொடர்ந்து கிரியை - செயல் நிகழ்கிறது. அதாவது செயல்பாடு, எண்ணத்தை நிறைவேற்றுவது நிகழ்கிறது. அது முதிர்ச்சி பெற்று அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இக்கருத்துக்கள் இந்தியப் பண்பாட்டின் ஆதாரங்களில் ஒன்றாகும். முருகனை வேண்டும்போது 'தருவாய் தொழிலும் பயனும்" என்றும், "என்றும் கேடற்ற வாழ் வினைத்தருவாய்' என்றும் 'நீறுபடக் கொடும்பாவம், பிணி, பசி யாவையும் இங்கு நீக்குவாய்' என்றும் பாரதி கூறுகிறார். சிவசக்தி என்னும் பாடலில் 'நின்னருள் வேண்டுகிறோம் - எங்கள் நீதியும் தர்மமும் நிலைப்பதற்கே பொன்னவிர் கோவில்களும் - எங்கள் பொற்புடை மாதரும் மதலையரும் அன்னநல் அணி வயல்கள் - எங்கள் ஆடுகள், மாடுகள், குதிரைகளும் இன்னவை காத்திடவே - அன்னை இணை மலர்த்திருவடி துணை புகுந்தோம் எம்முயர் ஆசைகளும்- எங்கள் இசைகளும் செயல்களும், துணிவுகளும் செம்மையுற்றிட அருள்வாய் - நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்து விட்டோம்" என்று பாரதி அழகுறப் பாடுகிறார். "வல்லமை தாராயோ - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" என்றும், "எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும்" என்றும் வேண்டுகிறார். 'பராசக்தி' என்னும் பாடலில் "நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடென்று ஒரு தெய்வம் கூறுமே, கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டிலேயறங் காட்டெனுமோர் தெய்வம்' | 4