பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் என்றும் நமது நாட்டின் பண்பாட்டுத் தளத்தில் நின்று பாரதி, புது நெறி வகுத்து நமக்கு புது வழி காட்டி நாட்டு மரபிற்குப் புதிய அறிவுச் செல்வத்தைச் சேர்க்கிறான். கலி வீழ்ந்து கிருதயுகம் வர வேண்டும் என்று. பொய்யும் அடிமையும் அச்சமும் நீங்கி, சத்தியமும் விழிப்பும் விடுதலையும் பெற்று பாரத சமுதாயம் முதன்மை பெற வேண்டும் என்று கூறுகிறார். "செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல்ல ருள் செய்க வென்றே பூதங்கள் ஐந்தில் இருந்தெங்கும் கண்ணில், புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம் வேதங்கள் சொன்னபடிக்கு மனிதரை மேன்மையுச் செய்தல் வேண்டு மென்றே வேகம், கவர்ச்சி முதலிய பல்வினை மேலிடும் சக்தியை மேவுகின்றோம் உயிரெனத் தோன்றி உணவு கொண்டே வளர்ந்தோங்கிடும் சக்தியை ஒதுகின்றோம்" "இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டுமென்றே மாறுதல் இன்றிப் பராசக்தி தன் புகழ் வைய மிசை நித்தம் பாடுகின்றோம் நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர் நோக்கங்கள் பெற்றிடவேண்டு மென்றே ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி என்றுரை செய்திடுவோம்" என்று பாரதி, இந்து தர்மக் கடமையின் இந்து தர்ம நோக்கத்தின், குறிக்கோள்களின் சாரத்தை தனது சக்தி வழிபாட்டின் மூலம் எடுத்துக் கூறுகிறார். பாரதி சக்தியை மாயையாக, மறைபொருளாகக் காணவில்லை. மகா சக்தியாக, வல்லமை மிக்க மகா சக்தியாகக் காண்கிறார். மாயை என்னும் சொல்லை வைத்து நமது நாட்டில் மாயாவாதம் ஒரு மருட்சியான தத்துவம் எழுந்தது. உலகவே பொய் என்றும் "காயமே இது பொய்யடா. காற்றைடைத்த பையடா" என்னும் கருத்து வாதம் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு போலி சோம்பேறி வாதமாகும். இந்த மாயா வாதத்தை இந்து தர்மத்தின் ஆதார நூல்களில் காண முடியவில்லை. இடைக்காலத்தில் ஏற்பட்ட இந்த மாயாவாதம் என்னும் போலி வேதாந்தத்தை பகவத் கீதை முழுமையாக மறுத்து அதை நிராகரித்து விட்டது என்பதை பாரதி மிகவும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். அதன் வெளிப்பாடாகவே அவருடைய பராசக்திப் பாடல்கள் எழுந்துள்ளன எனக் கூறலாம். பாரதி தனது பகவத் கீதை தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 'உபநிடதங்களிலும், வேதங்களிலும் 'மாயா' என்ற சொல் பராசக்தியைக் குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய்யென்ற தொருவாதம் உண்டாயிற்று. இதனால், ஜகத் பொய், தேவர்கள் பொய், சூரிய நட்சத்திராதிகள் பொய், மனம் பொய், சைதன்யம் மாத்திரம் மெய். ஆதலால் இந்த உலகத்துக் கடமைகள் எல்லாம் எரிந்து விடத்தக்கன. இதன் இன்பங்கள் எல்லாம் துறந்து விடத் தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது. "இந்த உலக இன்பங்களெல்லாம் அசாசுவதம், துன்பங்கள் சாசுவதம், இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பங்களையும், செய்யப் புகுதல் வீண் சிரமமாகும்" என்ற கட்சி ஏற்பட்டது. "ஆனால் இவர்கள் எல்லா இன்பங்களையும் துறந்து விட்டதாக நடிக்கிறார்களேயன்றி இவர்கள் அங்ங்னம் உண்மையிலேயே துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமும் இல்லை. கடமைகளைத் துறந்து விட்டுச் சோம்பேறிகளாகத் திரிவது சாத்தியம், இது மிகவும் சுலபமும் கூட இந்த சோம்பேறித் தனத்தை ஒரு பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. "இவர்கள் கடமைகளைத் துறந்தனரேயன்றி இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்து விட்டார்களா? சோறு இல்லாவிட்டால் உயிர் போய் விடுமே என்றால் அப்போது நீங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. ஸ்நாநவின்பத்தை இவர்கள் துறக்கவில்லை. துக்கவின்பத்தைத் துறக்கவில்லை. கல்வியின்பத்தைத் துறக்கவில்லை. புகழின்பத்தைத் துறக்கவில்லை. உயரின்பத்தைத் துறக்கவில்லை. வாதின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களில் முக்கியஸ்தர்களாகிய மாடாதிபதிகள் பணவின்பத்தைத் துறக்கவில்லை. அவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத்